Skip to main content

Posts

Showing posts from September, 2017

யுத்தத்துக்காக ஆயுதமா ஆயுதத்துக்காக யுத்தமா? (2)

இனி யுத்தத்துக்கு வருவோம். உலகின் முதல் கொலை எப்படி நடந்திருக்கும்? ஒரு வலுவான எதிரியை ஒருவன் கட்டையால் அடித்தோ கல்லால் மண்டையை பிளந்தோ, அல்லது கத்தி அல்லது ஈட்டி கண்டு பிடிக்கப்பட்ட பிறகென்றால் குத்தியோ கொன்றிருக்கலாம். ஆனால் இந்த ஆயுதங்கள் எதுவுமே இல்லை. எந்த ஆயுதங்களுமே சாத்தியப்படாத இடத்தில் அவன் வசிக்கிறான். அவன் கொல்ல வேண்டிய ஆள் அவனை விட வலுவானவர். பக்கத்தில் போய் கழுத்தை நெரித்து கொல்ல முடியாது. அப்படி எனில் கொலையே நடந்திருக்காது.

யுத்தத்துக்காக ஆயுதமா ஆயுதத்துக்காக யுத்தமா? (1)

இது ஒரு கோழியா முட்டையா என்பது போன்ற சிக்கல் என உங்களுக்கு தோன்றலாம். ஆனாலும் இக்கேள்விக்கு என்னிடம் தெளிவான விடை ஒன்று உள்ளது. மேலும் இக்கேள்வி வெகுசுவாரஸ்யமானது என்றும் எனக்குத் தோன்றுகிறது. மனிதனின் தேவைகள் ஒரு பண்டத்தை உற்பத்தி பண்ணத் தூண்டுகிறதா அல்லது நேர்மாறா? சமீபத்தில் ஒரு சமூகவியல் வகுப்பில் ஒரு மாணவி மார்க்ஸிய கோட்பாடு பற்றி பேசும் போது இவ்விசயத்தை குறிப்பிட்டாள். தேவையே பொருட்களின் உற்பத்தியை நேரடியாய் தீர்மானிக்கிறது என்றாள். நான் அவளிடம் கேட்டேன், “ஒரு அழகிய சுரிதார் பார்த்ததும், ஒரு புது போன் சந்தையில் வந்ததும் உங்களுக்கு அதை வாங்கத் தோன்றுகிறது. அங்கே தேவையா அல்லது அப்பொருள் நமக்குள் தூண்டும் ஆசையா நம்மை வாங்க வைக்கிறது? அதே போல ஒரு புதுப்படம் வெளியாகி அதைப் பற்றி மீடியாவில் பரபரப்பாய் பேசினால் போய் பார்க்கத் தோன்றுகிறது. நாம் பார்க்க ஆசைப்பட்டதனால் அப்படம் வெளியானதா அல்லது அப்படம் வெளியானதால் நமக்கு பார்க்க ஆசை தோன்றியதா?

ஹெச்.ஜி ரசூல் படைப்புலகம் பற்றி ஒரு கூட்டம்

ஒரு கடிதம்

வணக்கம் Abilash, நான் சமீபத்தில் தான் தங்களை பின் தொடர ஆரம்பித்து, படிபடியாக தங்கள் தளத்தில் உள்ள கட்டுரைகளை வாசிக்க ஆரம்பித்து உள்ளேன். நான் பின் தொடரும் இளம் தமிழ் எழுத...

Stalking: பெண்ணுடலின் சிக்கல் (2)

  பாலியல் பெண்களின் உடல்மொழியின் லிபி. ஆனால் உடலுறவு விழைவு இதில் பெரும்பாலும் இருப்பதில்லை.  இந்த முரண் ஆண்களுக்கு விளங்குவதில்லை. உதாரணமாய், ஒரு வைபவத்தின் போது, வீட்டில் விருந்தில், கோயில் பிரகாரத்து வரிசையில் பட்டுப்புடவை சரசரக்க நிலவிளக்கு போல் ஜொலிக்கும் ஒரு பெண் பல ஆண்கள் கவனத்தை ஈர்க்கலாம். அவளது நகர்வும் சைகைகளும் கண்களின் பொலிவும் ஆண்களுக்கான அழைப்பை கொண்டிருப்பதாய் தோற்றம் காட்டலாம். ஆனால் உண்மையில் அப்பெண்ணுக்கு அப்போது பாலுறவு எண்ணமே இராது. அதேநேரம் பாலுணர்வைத் தூண்டும் உடலை ஒரு முக்கியமான மனுஷியாய் தன்னை அவ்விடத்தில் காட்டிக் கொள்ள அவள் பயன்படுத்துவாள். இதைப் பெண்கள் மிக மிக அநிச்சையாய் செய்கிறார்கள். ஐம்பது வயதுப் பெண் கூட தன்னை அலங்கரித்து பொற்சிலை போல் காட்டிக் கொள்ள எத்தனிப்பது இதனால் தான். ஒரு பெண் பாலுணர்வைத் தூண்டும்படியாய் தன்னை காட்டிக் கொள்ளும் போது பாலியல் கிளர்ச்சியை ஆணிடம் ஏற்படுத்துவது அவளது நோக்கம் அல்ல. (நூறு ஆண்கள் உள்ள கூட்டத்தில் ஒரு பெண் அப்படி செய்வது எவ்வளவு ஆபத்தானது! எந்த பெண்ணும் தன்னை பார்க்கிற ஆண்கள் எல்லாம் தன்னிடம் வர வேண்...

Stalking - பெண்ணுடலின் சிக்கல் (1)

ஒரு பெண் தன்னை, தன் உடலை, அழகாய், கவர்ச்சியாய், மனதை கொக்கி போட்டு இழுக்கும்படியாய், காட்டும் போது அதன் நோக்கம் என்ன? ஆணை கவர்வது என இன்று சுலபமாய் நாம் சொல்லி விட முடியாது. கணிசமான பெண்கள் அதை ஏற்க மாட்டார்கள். தம்மை வெளிப்படுத்துவது, தன்னம்பிக்கையுடன் தன்னை கட்டமைப்பது, தனக்காகவே தன்னை அலங்கரிப்பது, சுதந்திரமாய் இருப்பது என பல கோணங்களில் பெண்கள் தமது உடல் வசீகரத்தை அர்த்தப்படுத்துவார்கள். ஆனால் இங்கு ஒரு முரண் உள்ளது: தன்னை அலங்கரித்து அழகாய் காட்டிக் கொள்வதோ தனது உடல் வடிவை, நெளிவை, நளினத்தை, தோலின் மிளிர்வை புலப்படுத்தி தன்னை கவர்ச்சியாய் காட்டுவதோ ஒருவித காட்சிப்படுத்தல் தானே? அதாவது இன்னொருவர் காண அன்றி நாம் ஏன் நம்மை ஒரு குறிப்பிட்ட விதமாய் காட்டிக் கொள்கிறோம்? இது சரி என்றால் ஆண் பார்ப்பதற்கு அன்றி (லெஸ்பியன் எனில் மற்றொரு பெண் கவனிப்பதற்கு அன்றி) வேறு எதற்காய் பெண்ணுடல் காட்டப்படுகிறது? இதையும் ஏற்றுக் கொண்டோம் என்றால் “அழகாய் தெரியும்” ஒரு பெண்ணை ஒரு ஆண் இச்சையுடன் ”பார்க்கலாமா”? “ரசிக்கலாமா?” பெரும்பாலான பெண்கள் ஆண்கள் தம்மை உற்றுப் பார்த்தால் எரிச்சலும் அருவருப்பும் ...

தனிமனிதன் எனும் பிரமை (6)

நமது உடல் நமது கட்டுப்பாட்டில் முழுக்க இருக்கிறது என்பது கூட ஒரு கற்பிதம் தானே என ஆதர்ஷிடம் கேட்டேன்.  ஒரு காலத்தில் தலித் பெண்கள் மேலாடை அணியக் கூடாது என ஒடுக்குமுறை நிலவியது. இன்றும் ஆடைக் கட்டுப்பாடு, ஆடை ஒழுக்கம் சார்ந்து பல சர்ச்சைகள் நிலவுகின்றன. இங்கு என்ன உடை அணிய வேண்டும், உடலை எப்படி முன்னிறுத்த வேண்டும் என்பதில் கூட அடிப்படையான உரிமையே நமக்கு இல்லையே? (இது குறித்து பூக்கோ செய்துள்ள ஆய்வுகளை அறிவோம்.) நம் உடல் நம் கட்டுப்பாட்டில் உள்ளதென்றால் ஏன் “கௌரவக் கொலைகள்” நடக்கின்றன? ஏன் சதா நாம் தாக்குப்படுவோம் எனும் அச்சத்துடன் பெண்கள் இருக்கிறார்கள்? ஏன் லாக் அப் சித்திரவதைகள், கொலைகள் நடக்கின்றன? நீங்கள் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு லுங்கியோ நைட்டியோ அணிந்து கொண்டு போக முடியுமா? அலுவலகத்தில் படுத்துக் கொண்டு வேலை செய்ய முடியுமா? திரையரங்கில் தேசிய கீதம் இசைக்கப்படும் போது நீங்கள் உட்கார்ந்திருக்க முடியுமா?

தனிமனிதன் எனும் பிரமை (5)

Who is the black sheep? என் மொழி எப்படி முழுக்க முழுக்க வாசகருடனான உரையாடலால், மோதலால், அவர்களை சென்று சேரும் எனது முனைப்பால் மாறியது, மாறுகிறது, எப்படி எனது எழுத்து முற்றிலும் நான் எதிர்பாராத விதங்களில் வாசகர்களால் புரிந்து கொள்ளப் படுகிறது, உணரப் படுகிறது என நான் எழுத்தாளனாய் மலர்ந்த காலத்தில் உணர்ந்து கொண்டேன்.  எழுத்து என்னையே மீறிச் செல்லும் இடங்களை உணர்ந்தேன். எத்தனையோ பேர்களின் கருத்துக்கள் என் சிந்தனைக்கு செறிவூட்டுகின்றன. நான் யோசிப்பதும், எழுதுவதும் எந்தளவுக்கு என்னுடையவை எனும் ஐயம் இப்போது எனக்கு வலுவாக எழுகிறது. என் எழுத்தில் நான் மிக மிகக் குறைவாகவே “நானாக” இருக்கிறேன்.  என் தரப்புகள், நம்பிக்கைகள், பிடிவாதமான அபிப்ராயங்கள், பிடிப்புகள் நிலைப்பதில்லை. நான் ஓடும் நதி போல் மாறிக் கொண்டே இருக்கிறேன். அப்படி என்றால் இந்நதியின் பரப்பில் தோன்றும் ஆயிரமாயிரம் அலைகளில் எந்த அலை நான்?

தனிமனிதன் எனும் பிரமை (4)

நான் அனுதினமும் இடஒதுக்கீட்டை கடுமையாய் எதிர்க்கும் மேற்தட்டு மாணவர்களிடம் உரையாடுகிறேன். அவர்கள் அப்படியே மேற்சொன்ன தனிமனித வாதத்தை பேசுகிறார்கள். மனிதனின் ஆதாரமான திறமையின் அடிப்படையிலே அவனுக்கான வாய்ப்புகள் அமைய வேண்டும் என்கிறார்கள். ஆனால் ஆதாரமான திறமை என ஒன்று இல்லை; அது கட்டமைக்கப்பட்டது என அவர்களுக்கு புரிவதில்லை.

தனிமனிதன் எனும் பிரமை (3)

நான் போன பதிவில் குறிப்பிட்ட ஆதர்ஷ் சமீபமாய் ஐயன் ரேண்டின் நூல்களை படித்து வருகிறார்.  ரஷ்யாவில் பிறந்து அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்து எழுத்தாளராய் அங்கு மலர்ந்த ஐயன் ரேண்ட் The Fountainhead மற்றும் Atlas Shrugged ஆகிய நாவல்களுக்காகவும், தனது தனிமனிதவாத கருத்துக்களுக்காகவும் இன்றும் பிரசித்தமாய் விளங்குபவர். அவர் தனிமனிதவாதத்தின் போர்க்கொடி என்பதால் பதின்பருவத்தினர் தொடர்ந்து அவரது நாவல்களின் பெரும் ரசிகர்களாக விளங்குகிறார்கள். இன்றும் எந்த கல்லூரிக்கு சென்றாலும் யாராவது அங்கு The Fountainhead படித்துக் கொண்டிருப்பார்கள்.