Skip to main content

Posts

Showing posts from April, 2014

கோயில் சொத்தும் கறுப்புப்பணமும்

திருப்பதியில் பச்சன்கள் பத்மநாபசாமி கோயிலின் தங்க புதையல் பற்றின சர்ச்சை எழுந்த போது ஜெயமோகன் எழுதின கட்டுரை நினைவிருக்கும். இவ்வளவு தங்கமும் நிலைத்திருப்பதே ராஜகுடும்பத்தின் பொறுப்பில் இருப்பதால் தான், அரசின் வசம் சென்றிருந்தால் அரசியல்வாதிகள் முழுக்க கொள்ளையடித்திருப்பார்கள் என்றார். ஆனால் இப்போது உச்சநீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் அறிக்கையில் கோயில் சொத்தை அதன் ராஜகுடும்ப பொறுப்பாளர்களே கொள்ளையடித்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த வழக்கின் மையம் கோயில் சொத்து யார் பொறுப்பில் இருந்தால் பாதுகாப்பு எனும் கேள்வி. தனியார் வசம் இருந்தால் இன்னும் ஆபத்தானது என இப்போது தெளிவாகி உள்ளது. திருப்பதி தேவஸ்தானத்தின் கீழுள்ள ஆயிரம் கோடி சொத்துக்களையும் சரியாக கணக்கு பார்த்து கட்டுப்படுத்த இச்சந்தர்பத்தை பயன்படுத்த வேண்டும்.

இந்திய ஊழல் லீக்

"நீங்க கவலைப்படாதேள், குத்தம் பண்றாவாளை ஸ்வாமி காப்பாத்துவா. ஷேமமா வச்சுப்பா. தட்டில கொஞ்சம் தாராளமா அள்ளிப் போடுங்கோ" ஊழல் குற்றச்சாட்டு காரணமாய் உச்சநீதி மன்றத்தால் பதவி நீக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் ஸ்ரீனிவாசன் பிடிவாதக்காரர். வரும் செப்டம்பரோடு அவரது பதவிக் காலம் முடிகிறது. நீதிமன்றத் தலையீட்டால் அவர் பதவி இழந்த பின்னரும் தன்னை மீள் அமர்த்தும் படி கோரிக்கை விடுத்தார். அப்போது நீதிமன்றம் “முக்தல் விசாரணை குழுவால் குற்றம் சாட்டப்பட்ட 13 பேரில் நீங்க தான் முதல் ஆள். உங்கள் மீது ஒன்றுக்கு மேற்பட்ட குற்றச்சாட்டுகள் உள்ளன” என்று அவரை மீண்டும் கண்டித்த்து. இப்படி அவர் பதவியை அண்டிக் கொண்டே இருப்பதால் தான் இன்னொரு புறம் ஐ.பி.எல் ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரிக்க முடியாமலே போகின்றன. தலைவர் தான் பிரதான குற்றவாளி, அவரை பாதுகாப்பதிலேயே வாரியத்தின் ஆற்றல் எல்லாம் செலவாகும் என்றால் வேறு குற்றங்களை எப்படி விசாரிப்பது? இன்னொரு புறம் ஸ்ரீனிவாசன் வாரியத்தின் மீது தனக்குள்ள பிடியை விடாமல் இருப்பதிலும் உன்னிப்பாக இருக்கிறார். ச்சாங்க் மனோகர் போன்று அவருக்கு எதிரான ஒரு...

படைப்பு சுதந்திரம்: சில விவாதங்கள்

நேற்று அகநாழிகையில் நடந்த “படைப்பு சுதந்திரம்” பற்றின கூட்டத்தில் எதிர்பார்த்த்து போல் ஜோ டி குரூஸ் பற்றியும் பலர் பேசினார்கள். மோடியை அவர் ஆதரித்த்து தவறு என தான் பொதுவான மனநிலை இருந்தது. “ஏங்க ஆதரிக்கக் கூடாதா?” என யாரும் கேட்காதது ஆறுதலாக இருந்த்து. அதற்காக புத்தகத்தை மொழிபெயர்க்க மாட்டேன் என கூறுவது அநீதி என பரமேஸ்வரி உள்ளிட்டோர் கூறினர். எனக்கு அப்போது வேறு சில கேள்விகள் எழுந்தன.

புயல் அங்கிருந்தது - பிராவிக் இம்ப்ஸ்; தமிழில் ஆர்.அபிலாஷ்

வானத்தில் பறந்தன எல்லா காட்டுவாத்துக்களும் வானில் பறந்து கொண்டிருந்தன பனியும் கடலுக்கு விரைந்து கொண்டிருந்தன நதிகள் நடுக்கடல் அலைகளோ கரை நோக்கியும்

இன்மை ஆசிரியர் பக்கம் 1

கவிதைகள் நீர்த்துப் போய் விட்டன என்று தற்கால தமிழ்க் கவிதை குறித்த ஒரு புகார் நிலவியது. ரெண்டாயிரத்தின் பிற்பகுதியில் கவிதையில் புது பாணிகளோ கருத்தாக்கங்களோ உருவாகவில்லை. மொழிபெயர்ப்பு வழி முன்பு நிகழ்ந்தது போல் அயல்நாட்டு கவிஞர்கள் முழுவீச்சில் இங்கு அறிமுகப்படுத்தப்படவில்லை. தொண்ணூறுகளில் உச்சத்தில் இருந்த கவிஞர்கள் பலர் இப்போது மெல்ல சமதளத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். முக்கியமான கவிஞர்கள் உரைநடையில் ஆர்வம் செலுத்தினர். இளம் கவிஞர்களுக்கு முன்மாதிரிகள் இல்லாமல் ஆயினர். ரெண்டாயிரத்தின் பிற்பகுதியில் முகுந்த நாகராஜனைத் தவிர குறிப்பிடத் தகுந்த அறிமுகங்கள் நிகழவில்லை என்ற விமர்சகர்கள் இது கவிதையின் ஒரு இறங்குமுக காலம் என்றனர். இன்னொரு புறம் கவிதைகளின் எண்ணிக்கை பல மடங்கு பெருகியது. அதே வேளை பத்திரிகைகள் கவிதைகளுக்கான கதவுகளை மூடின. கவிதை நூல்கள் விற்காது என்று கூறி பதிப்பகங்கள் கவிஞர்களை வாசலிலே வைத்து திருப்பி அனுப்பினர். காகித விலை உயர்வும், நாவலுக்கு ஏற்பட்ட அபரித மதிப்பும் கவிதையை எதிர்மறையாய் பாதித்தது. கவிஞர்களின் விமர்சனக் கூட்டங்கள் நக்சலைட் ரகசிய சந்திப்புகளைப் போ...

தீமையின் சகஜத்தன்மை - நிஸிம் மன்னத்துகரன் (தமிழில் ஆர்.அபிலாஷ்)

-       -     சாம்ராஜ்யங்கள் அழியும். நிழலுலக தாதாக்கள்/ அரசியல் கனவான்களைப் போல வீறுநடை போடுகிறார்கள். -     தளவாடங்களைக் கடந்து மக்களால் இனி எப்போதும் காண முடியாது – பெர்டோல்ட் பிரஷ்ட் -       -     ஜெர்மானிய அமெரிக்க தத்துவ்வியலாளர் ஹென்னா அரெண்ட் தான் “தீமையின் சகஜத்தன்மை” என்கிற சொற்றொடரை உருவாக்கி உலகுக்கு அளித்தார். 1963இல் அவர் “எருசலேத்தில் எய்க்மேன்: தீமையின் சகஜத்தன்மை பற்றி ஒரு அறிக்கை” என்றொரு நூலை வெளியிட்டார். யூத அழித்தொழிப்பில் முக்கிய புள்ளியான நாஜி ராணுவ அதிகாரி அடோல்ப் எயிக்மேன் மீதான நீதிவிசாரணை பற்றிய அவரது பதிவு தான் அந்நூல். போர்க்குற்றத்துக்காக எயிக்மேன் தூக்கிலிடப்பட்டார். அரெண்டின் அடிப்படையான கருதுகோள் இது தான் – யூத இன அழித்தொழிப்பு போன்ற கொடூரமான குற்றங்கள் பைத்தியங்களாலோ சாடிஸ்டுகளாலோ நட்த்தப்படுவதில்லை – அவை ஒரு அதிகாரியின் நுணுக்கமான அக்கறையுடன் ஒரு சராசரி, சாதாரண, மனநலம் கொண்ட ஆளால் தான் செயப்படுகின்றன.

வாழைப்பழத் தோல்களின் அரசியல்

நந்தி போல் குறுக்கே வந்த மோடி தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு நூல்கள் மொழியாக்கம் பெற கணிசமான அரசியலும் லாபி வேலைகளும் தேவையுள்ளது. உதாரணமாய் ஆக்ஸ்பொர்டு பதிப்பகம் எப்படி தமிழ் நூல்களை தேர்வு செய்யும் என்பதை அறிந்தால் அதிர்ச்சி அடைவீர்கள். இது போக ஏஜெண்டுகளும் உள்ளார்கள். காலச்சுவடு போல் சில பதிப்பகங்களுடன் தொடர்புள்ள மொழிபெயர்ப்பாளர்கள் மூலம் நூல்கள் எளிதாக மொழியாக்க தகுதி பெறும். சாதி தொடர்புகளும் பயன்படுகின்றன. தரம் மட்டும் அடிப்படை அல்ல ; அல்லது தரமே முக்கியம் அல்ல. பெரும்பாலும் ஆங்கில பதிப்பாளர்களுக்கு குறிப்பிட்ட புத்தகம் பற்றி ஒன்றும் தெரிந்திருப்பதில்லை. முக்கிய புள்ளி யாரோ பரிந்துரைத்தால் போதும். இப்படி ஆயிரம் அரசியல் காரணமாய் ஒரு புத்தகம் மொழியாக்கப்படும் போது அதே மாதிரி ஒரு அரசியல் காரணமாய் (மோடிக்கு ஆதரவு தெரிவித்தது) ஜோடி குரூசின் நாவல் மொழியாக்கத்தை நவயானா நிறுத்தி உள்ளது ஒன்றும் முரணல்ல.  வாழைப்பழத் தோலை கீழே வீசினால் ஒன்று அடுத்தவன் வீழ்வான் , அல்லது வீசினவனே வீழ்வான். ஆங்கில மொழியாக்க உலகம் இவ்வாறு வாழைப்பழ தோல்களால் நிரம்பி உள்ளன. All ...

சந்தியா ராகம்: வயோதிகத்தின் பாடல்

வயோதிகம் குறித்து ஒரு சிறு அச்சம் நமக்குள் ஆழத்தில் உள்ளது . வயோதிகத்தை தனிமை , நிராகரிப்பு ஆகியவற்றின் ஒரு பொட்டலமாக பார்க்கிறோம் . குஷ்வந்த சிங் ஒரு கட்டுரையில் வயோதிகத்தின் போது நிம்மதியாக இருக்க நிறைய பணமும் , நல்ல ஆரோக்கியமும் அவசியம் என்கிறார் . எண்பது வயதுக்கு மேல் என்னென்ன வசதிகள் தேவைப்படும் என அவர் இடுகிற பட்டியல் பார்த்தால் நாமெல்லாம் அறுபது வயதுக்குள் போய் சேர்ந்து விட வேண்டும் என மனதுக்குள் பிரார்த்தித்துக் கொள்வோம் .

குஷ்வந்த் சிங்: ஒரு நூற்றாண்டின் மறைவு

-     குஷ்வந்த சிங் தமிழக பத்திரிகையாளர்களைப் போல் அல்லாமல் ஒரு தலைவரை பெயர் போட்டு அழைக்கும் அதிகார பீடிகையும் தன்னம்பிக்கையும் கொண்ட அரசியல் , சமூக விசயங்களை துணிச்சலாய் விமர்சித்து எழுதிய வடக்கத்திய பத்திரிகையாளர் . எழுத்தாள அந்தஸ்தும் , தில்லியின் அதிகார வட்டத்தில் தாக்கமும் , பரவலான வாசக பரப்பும் கொண்டவர் . ஒரு கலைமாமணி வாங்க நாம் இங்கு தலைவர்களின் காலடியில் தவம் இருக்க அவர் தனக்கு 74 இல் வழங்கப்பட்ட பத்மபூஷன் விருதை சீக்கிய படுகொலைகளை கண்டிக்கும் நோக்கில் 84 இல் திருப்பி அளித்தவர் . ஆனாலும் அரசாங்கம் 2007 இல் பத்ம விபூஷனை அவருக்கு அளித்தது .

கேஜ்ரிவாலுடன் ஒரு உரையாடல்

நிருபர்: “தனித் தமிழ்நாடு கோரிக்கையில் உங்களுக்கு பிரச்சனையில்லை என உங்கள் கொள்கை அறிக்கையில் கூறியிருக்கிறீர்களே?” கேஜ்ரிவால்: “ஆம் மக்கள் அதை விரும்பினால் எங்களுக்கு பிரச்சனை இல்லை தான்” நிருபர்: “அப்பிடின்னா தமிழ்நாடு பிரியலாமுன்னு சொல்றீங்க?” கேஜ்ரிவால்: “ஆமா, ஆனா இதனால இந்தியாவோட தேசிய ஒருமைப்பாட்டுக்கு எந்த குந்தகமும் வரக் கூடாது” நிருபர்: “அதெப்டிங்க முடியும்?”