Skip to main content

புயல் அங்கிருந்தது - பிராவிக் இம்ப்ஸ்; தமிழில் ஆர்.அபிலாஷ்


வானத்தில் பறந்தன
எல்லா காட்டுவாத்துக்களும்
வானில் பறந்து கொண்டிருந்தன பனியும்
கடலுக்கு விரைந்து கொண்டிருந்தன நதிகள்
நடுக்கடல் அலைகளோ கரை நோக்கியும்


வேலியில் இருந்து ஓடிக் கொண்டிருந்தன குதிரைகள்
வேலிகள் ஓடிக் கொண்டிருந்தன பூமியில் இருந்து
பூமி தப்பித்து பறந்து கொண்டிருந்த்து வானில் இருந்து
வானம் முழுக்க நிரம்பியிருந்த்து பறக்கும் நட்சத்திரங்களாலும்
எண்ணற்ற சூரியன்களாலும்
டெய்ஸிப் பூக்கள் துள்ளி விழுந்தன புற்களில் இருந்து
மலையோர பைன் மரங்கள் தப்பித்துக் கொண்டிருந்தன
மலையும் கூட ஓட்டத்தில் இருந்தது, ஆனால்
தெற்கே பறக்கும் வாத்துகளை விட
வசந்தகால நதிகளை விட
மெதுவாக ஆனாலும் அது ஓட்டத்தில் தான் இருந்த்து



கற்கள் ஒன்றன் மேல் இன்னொன்றாய் உராய்ந்து தேய்ந்திட
சரளைக் கற்கள் அரைந்து தூசாக, புயலுக்கு முன் தப்பித்தபடி இருந்த்து அது
II
எல்லாம் தப்பித்தபடி இருந்தன
கொஞ்சம் தொலைவு பின்னிட்டாலும் நானும் கூடத் தான்
என் தப்பியோட்டம் பறக்கும் மேகத்தை விட விரைவாக
புயல் அங்கு இருந்த்து என்று மட்டுமே தெரியும் எனக்கு
பெரும் வேகத்துடன் கம்பீரமாய் திமிராய்
அற்புதமான வாளை விட கூர்மையாய்

III

ஆக நான் தப்பித்தபடி இருப்பேன்
வேகமாய் இன்னும் வேகமாய்
என் ஆன்மா புயலுடன் உரசிப்
பற்றிக் கொள்ளும் அளவு வேகமாய்
அதன் பின்
உதிர்வேன் விரிசலுற்ற பழுப்பு இலையாக
என் ஊன் பூஞ்சாணோடு சுருங்கிப் போக
குருதி ஊறி இறங்கும் மழையுடன் கரைய
என் தேகத்தின் தப்பி ஓட்டமெல்லாம் ஒரு விநோத மறுவருகை ஆக



பிராவிக் இம்ப்ஸ் ஒரு குறிப்பு
பிராவிக் ஒரு அமெரிக்க கவிஞர். 1904இல் பிறந்தார். கல்லூரிப் படிப்புக்கு பின் பாரிஸுக்கு சென்று சிக்காகோ டிரிபியூன் பத்திரிகையில் பிழைதிருத்துநராக பணி செய்தார். 1944இல் அவர் வானொலி அறிவிப்பாளராகவும் வேலை பார்த்தார். நாற்பதாவது வயதில் கார் விபத்தில் இறந்தார். இம்ப்ஸ் கவிதைகளுடன் நாவல், வாழ்க்கைசரிதை ஆகியனவும் எழுதினார். அவரது சில நூல்கள்:
  The Professor's Wife
  Eden—Exit this Way, and Other Poems (1926)
  Bernard Faÿ's Franklin: The Apostle of Modern Times (co-written with Bernard Fay; 1929

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...