“Policies and Practices for Supporting Learners with Disabilities in Digital Learning Environments in Indian Higher Education,” எனும் தலைப்பிலான என் அத்தியாயம் Advancing Access to Digital Learning எனும் நூலில் வெளியாகி உள்ளது. இதன் தொகுப்பாசிரியர் Florence Williams (University of Central Florida). பதிப்பாளர் IGI Global. ஒரு அயல்நாட்டுப் பதிப்பு நூலில் வெளியாகும் என் முதல் ஆய்வுக் கட்டுரை இது.
புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share