30-40 பேர்கள் மட்டுமே வருவார்கள். ஒவ்வொருவரும் புத்தகத்தை வாங்கிப் படித்துவிட்டு வருவார்கள். புத்தகத்தைப் பற்றி தம் கருத்தை வெளிப்படையாகச் சொல்வார்கள். முகஸ்துதி, வெற்றுப் பேச்சுக்கள் இல்லை. சிலர் விரிவாக ஆழமாக அலசுவார்கள். சற்றும் எதிர்பாராத ஒரு கண்ணோட்டத்தை, வாசிப்பை முன்வைப்பார்கள். கடந்த முறை "தாயைத்தின்னி" நாவலுக்கான கூட்டம் நடந்தபோது அப்படித்தான் இருந்தது. ஒரு புத்தகத்தைப் பற்றி முப்பதுக்கும் மேற்பட்ட மூளைகள் தம் கற்பனையால் 2 மணிநேரங்களாகப் புதியபுதிய களங்களைக் கண்டடைந்து விவாதித்து முன்னகர்வது வியப்பான அனுபவமாக இருந்தது. அலங்காரப் பேச்சுக் கூட்டங்களைக் கேட்டுக்கேட்டு அலுத்துப் போன நான் அன்று உற்சாகமாகிப் போனேன். இலக்கியத்துக்கு பெருங்கூட்டம், படோடாபம், விளம்பரம், லாபியிங் ஆகிய விசயங்களைவிட தீவிரமான விவாதங்களும், முழுக்கமுழுக்க பிரதியைக் குறித்த வினாக்களும் குறுக்கீடுகளுமே முக்கியம்.
புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share