துன்பியல் வடிவத்தில் தஸ்தாவஸ்கியின் பெரும்பாலான நாவல்கள் வீழ்ச்சியின் விளிம்பில் நாயகனைக் கொண்டு போய் விட்டு அவன் தன் குற்றத்தை உணர வாய்ப்பளித்து அவனைக் காப்பாற்றி விடக் கூடியவை. “குற்றமும் தண்டனையும்” இதற்கு சிறந்த உதாரணம் - ரஸ்கோல்நிக்கோவ் தன் முன் நிகழ்கிற சமூக ஏற்றத்தாழ்வுகள், வறுமை, அதனால் ஏற்படும் அநீதிகளுக்கு தீர்வு என்ன என்று யோசிக்கிறான். பணம் படைத்த கெட்டவர்களை அழித்தால் என்ன என்று யோசிக்கிறான்? அவன் களங்கமற்ற, லட்சியவாத இளைஞனே. அதுவே அவனுடைய உயர்ந்த குணம். (அதுவே அவன் வீழ்ச்சியடையும் போது நமக்கு அவன் மீது நமக்கு பச்சாதாபம் தோன்றக் காரணம்.) ஆனால் அவனுடைய வாழ்க்கைப் பார்வையின் பிறழ்வு அவனை வீழ்ச்சிக்கு இட்டு செல்கிறது. அதே நேரம் சோனியா எனும் பதின்வயது பாலியல் தொழிலாளியின் கருணை மிக்க சுபாவம் அவனை மீட்கிறது, தன்னுடைய துன்பியல் வழுவை உணர்ந்து அவன் தன்னை காவல் துறையிடம் ஒப்புக்கொடுக்கிறான்; தான் செய்த கொலையைப் பற்றி வாக்குமூலம் அளித்து தன் குற்றவுணர்வில் இருந்து மீள்வதற்காக ஒரு புனித பயணம் போல சைபீரிய சிறைக்கு செல்கிறான். அத்துடன் நாவல் முடிகிறது.
நாவலின் நுணுக்கங்களைத் தெரிந்துகொள்ளவும் நாவல் எழுதுவதில் நேரடியான வழிகாட்டுதலைபப் பெறவும் என் நாவல் வகுப்பில் சேருங்கள். தொடர்புக்கு 9790929153.