புனைவெழுத்தாளராக ஒவ்வொரு எழுத்தனுபவம் முடிந்த பின்னரும் நான் நினைப்பது: இன்று எனக்குள் வருத்தங்கள் இருந்தாலும் எழுத்து தரும் ஆறுதல் உள்ளது. அதை யாரும் என்னிடம் இருந்து பறிக்கக் கூடாது என எண்ணினேன். இன்று நான் நிம்மதியாக உறங்கச் செல்வேன். இன்று என் கனவில் நான் எழுத மாட்டேன். எனக்கு சலனங்களற்ற, ஆழ்ந்த கனவுகள் வாய்க்கும். நான் அடர் இருட்டின் பாதையில் நடக்கையிலும் எழுத்தெனும் தேவதூதன் என்னுடன் வருவான், கடும் துன்பத்தின் பள்ளத்தாக்கில் விழுந்தழியாமல் அவன் என்னைக் காப்பாற்றுவான் எனத் தோன்றுகிறது. எழுத்தாளனாக இருப்பதன் மிகப்பெரிய கொடுப்பினை இதுவே. எழுத்தாளனுக்குத் தனிமையே இல்லை. எழுதுகோல் எனும் தெய்வம் அவனுடன் என்றும் இருக்கும்!
என்னுடைய ஆன்லைன் வகுப்பு ஜூலை - ஆகஸ்டில். இணையுங்கள். தொடர்புக்கு 9790929153.