நீங்கள் வெர்ஜீனியா வூல்பின் நாவல்களில் (Mrs Dalloway; To the Lighthouse) வரும் நனவோடை உத்தியைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இதை தமிழில் நகுலனும் வெற்றிகரமாக பயன்படுத்தினார். இது வாசிக்க மிகவும் சுவையானது; நமது மனத்தின் காலம், அதன் போக்குக்கு, நமது பிரக்ஞையின் செயல்பாடு குறித்த ஆர்வம் கொண்டோருக்கு இந்த உத்தியிலான புனைவுகள் படிக்க உவப்பாக இருக்கும். “மிஸஸ் டேலோவேய்” நாவலில் உதாரணமாக டேலோவேய் எனும் பெண்மணி தன் வீட்டில் இருந்து வெளியே நடப்பதற்காக வருகிறார். அதற்கு அவரது பார்வையிலும், புலன்களிலும் பல விசயங்கள் பட்டு பாதிப்பை ஏற்படுத்துகின்றன, இவை பல நினைவுகளை முன்னுக்குப்பின்னாய் கிளர்த்துகின்றன. ஐந்தே வினாடிகளில் நம் மனம் நாமே அறியாமல் ஐம்பது விசயங்களைப் பரிசீலித்து விடுகிறது என்பதை இந்த வகை எழுத்து காட்டுகிறது. ஆனால் நான் லீனியரும் சரி நனவோடையும் சரி நேர்கோட்டு காலத்தை மறுக்கின்றனவே ஒழிய காரண-விளைவு தர்க்கத்தை மறுப்பதில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share