செல்வக்குமார்: பணி நேரம் போக சமூக வலைதளத்தில் நேரம் போகவிடுகிறேன் அண்ணா. அதைச் சரி செய்ய வேண்டும். முதலில் வாசிப்பிலும் வேகம் குறைந்து காணப்படுகிறேன். நீங்கள் சொல்வதை நான் செய்து பார்க்க வேண்டும் சுய பரிட்சையாக.
நான்: சமூகவலைதளத்தில் படிப்பதை குறைத்து அதிலே எழுதுங்கள்.
நேர்மையாக எழுதுங்க.
மனதுக்குப் பட்டதை மட்டும், அரசியல் சரிநிலை பார்க்காமல் எழுதுங்க.
டிரண்டுகளைப் பொருட்படுத்தாமல் அதே நேரம் சுவாரஸ்யமாக எளிமையாக எழுதப் பழகுங்கள்.
எழுதக் கிடைக்கும் எல்லா இடங்களையும் பயன்படுத்துங்க.
Always think as a writer, not as an individual, family man, friend, employee. யாராவது காறித்துப்பினால் கூட இதை எப்படி எழுத்தாக்கலாம் (கண்டெண்ட் அல்ல) என யோசியுங்கள்.
மேலும் தெரிந்துகொள்ள என்னுடைய ஆன்லைன் வகுப்பு ஜூலை - ஆகஸ்டில். இணையுங்கள்.