இந்த ஊடக சந்திப்பு ரொம்ப வேடிக்கையாக, ஜாலியாக இருந்தது. எட்டு வருடங்கள் காவல்துறையில் குப்பை கொட்டினேன் என்கிறார், தேசியக் கட்சியில் மாநிலத் தலைவராக நான் ஏன் குப்பை கொட்டவேண்டும் என்கிறார். "ரோட்டுக்கு வந்து போராட்டம் பண்ணினால் அப்படியே ஆயிரம் போலீசை அனுப்பி அமுக்கி கல்யாண மண்டபத்தில வச்சிருவீங்க. இனிமேல் அப்படிப் போராட்டம் பண்ண நாங்கள் தயாராக இல்லை, போராட்டம் பண்ணாத்தானே அரெஸ்ட் பண்ணுவீங்க?" என்று அவர் கேட்டபோது நான் சிரித்துவிட்டேன். நூதனமாக ஒரு புதிய உத்தியை அறிவித்தார், "எல்லா தொண்டர்களும் தம் வீட்டுக்கு முன் நின்று போராடுவார்கள்". வீட்டுக்கு முன்னால் போய் நிற்பதெல்லாம் போராட்டமா? வீட்டுக்கு வெளியே வராமால் ஒருவரால் வீட்டுக்குள்ளேயா இருக்க முடியும்? எத்தனை பேர் தினமும் வீட்டிலிருந்து வெளியே வருகிறார்கள். அவர்களையும் போராட்டக்காரர்களையும் மக்கள் எப்படி கண்டுகொள்வார்கள்? அப்படியே எதாவது பதாகையைப் பிடித்து செல்பி எடுத்தாலும் அது ஏதோ சாதா செல்பியைப் போலத்தான் இருக்கும். அதெல்லாம் போராட்டமா? தலைகீழாக நின்று போராடினால் கூட வித்தியாசமாக இருக்கும். எளிய மக்கள் எப்படியெல்லாம் வித்தியாசமாகப் போராடுகிறார்கள். இவர் ஏன் இப்படி உளறுகிறார் என விழுந்து புரண்டு சிரித்தேன். கடைசியாக அவர் சாட்டையால் ஆறுமுறை அடித்துக்கொள்வேன் என்று சொன்னதுதான் முத்தாய்ப்பு. அதைச் செய்துவிட்டாரா? காணொளி இருந்தால் பகிருங்கள்.
செருப்பில்லாமல் எப்படி பேரணியின் போது வெயிலில் நடப்பார்? தேர்தல் பிரச்சாரத்தின் போது என்ன செய்வார்? ஒருவேளை இனி பேரணியே போவதில்லை என முடிவெடுத்துவிட்டாரா?
அண்ணாமலை திரும்ப வந்தாலே அரசியல் ரொம்ப ஜாலியாக காமிடியாக இருக்கிறது.