காலத்தை விடப் பெரிய சொத்து இல்லை. அதைத் திரும்பக் கையளிப்பதே ஒரு ஆண்டின் முடிவு என்று தோன்றுகிறது. யாருக்கு கொடுக்கிறோம் எனத் தெரியவில்லை. ஆனால் கடனாகப் பெற்ற ஒன்றைத் திரும்பக் கொடுக்கிறோம். நன்றாக இருந்தது, இல்லை, ஆனால் என்னுடையது அல்ல, வைத்துக்கொள் என்று கொடுக்கிறோம். நமக்கு காலத்தைத் தந்த அந்த மானுட இருப்புக்கு நன்றி. அது நாமே தான் என்பதால் நமக்கு நன்றி. புத்தாண்டை வாழ்த்தும்போது நம்மை நாமே கட்டிக்கொண்டு விடைபெறுகிறோம். காலத்தினுள் இருக்கிறோம், நமக்குள் இருக்கிறோம். காலத்தில் இருந்து காலத்துக்குச் செல்கிறோம். நமக்குள் இருந்து நமக்குள் செல்கிறோம்.
புத்தாண்டு வாழ்த்துகள். இன்றும் நமதே! நாளையும் நமதே!
