“நான் நிறைய பணக்கார ஜோடிகளை, பாலிவுட் செலிபிரிட்டிகளை விவாகரத்து செய்துவைத்துள்ளேன். விவாகரத்து அவர்களிடையே பெருகி வருவதற்கு என்ன காரணம் தெரியுமா? அவர்களுக்கு வாழ்க்கை போரடிக்கிறது. அதனால் விவாகரத்து பண்ணிவிட்டு வாழ்க்கையில் புதுசாக எதையாவது முயன்று பார்க்கலாம் என நினைக்கிறார்கள்.” - (ரஹ்மானின் மனைவி) சாயிரா பானுவின் வக்கீல் வந்தனா ஷா.
போரடிக்குதுன்னா பத்து ரூபாய்க்கு பன் வாங்கித் தின்னலாம். அல்லாவிடில் எதாவது புதிய விளையாட்டைக் கற்றுக்கொண்டு ஆடலாம், உழைத்து புதிய திறன்களைப் பெறலாம், ஒரு இலக்கை நிர்ணயித்து அதை நோக்கி முன்னேறலாம், மூட்டை முடிச்சு தூக்கிக்கொண்டு டிரெக்கிங் எனும் பெயரில் எவெரெஸ்ட் சிகரங்களின் உச்சியில் கொடிநாட்ட முயலலாம். இப்படி எவ்வளவோ செய்யலாம். எதற்கு விவாகரத்து பண்ணனும்?