மக்களால் நிலத்திலோ வங்கியிலோ பணத்தைப் போட்டு வைக்க முடியாதபடி பொருளாதாரம் வீங்கி விட்டது; எல்லா இடங்களிலும் வரியை அதிகரிக்கிறார்கள். ஓய்வூதிய திட்டமென ஒன்று அரசிலோ தனியார் நிறுவனங்களில் இன்று இல்லை. எதிர்காலம் குறித்த கவலைகள், நிலையாமை குறித்த பதற்றமும் சேர்ந்து மக்களை குழப்பமான நிலையில் தள்ளுகின்றன. மக்கள் பின்வாசல் வழியாகத் தப்பிக்கலாம் என்று போகும் போது அங்கு அவர்களை மடக்கிப் பிடிக்க போலி நிதி நிறுவனங்கள் நிற்கின்றன. 14, 346 கோடி என்பது சாதாரணத் தொகை அல்ல. நிச்சயமாக அதிகாரிகளின் (கூடவே 'அரசியல்வியாதிகளின்'), காவல்துறையின் அனுமதியுடனே, பங்களிப்புடனே இந்த முறைகேடுகள் நடக்கின்றன. இதுவரை தமிழ்நாட்டில் நடந்த மோசடிகளில் திருடப்பட்ட பதினாலாயிரம் கோடிகளில் ரெண்டாயிரம் கோடிகளையாவது அவர்கள் முழுங்கி இருப்பார்கள்.
நவீன இந்தியாவின் மிகச்சிறந்த தொழிலே நிதி மோசடி தான் - மக்களை ஏமாற்றிப் பறிப்பது, சவுக்கு ஸ்டைலில் தொழிலதிபர்களை மிரட்டிப் பறிப்பது, கறுப்புப் பணம், வங்கியில் இருந்து பல ஆயிரம் கோடிகளை சுருட்டுவது - இதற்கெல்லாம் பெரிய தண்டனைகளோ கட்டுப்படுத்த வலுவான சட்டங்களோ இல்லை. நிதி மோசடியை ஒரு குற்றமாக ஊடகம் காட்டுவதோ குற்றவாளிகளை விமர்சிப்பதோ இல்லை. மாறாக அவர்கள் கொண்டாடப்படுகிறார்கள். அவர்களை அரசியல் தலைவர்கள் பஞ்சாயத்து பண்ணி மிரட்டினால் கட்சியின் தலைவர் என்றும் பாராமல் வாடகைக் கொலையாளியை வைத்து ஆளைப் போட்டுத் தள்ளி விடுகிறார்கள். எதிர்காலத்தில் இவர்களே கட்சியொன்றை உருவாக்கி ஆட்சியைப் பிடித்தாலும் ஆச்சரியப்பட மாட்டேன்.
இதற்கு உண்மையான தீர்வு வங்கி இருப்புத் தொகைக்கான வட்டியை அதிகரித்து ரியல் எஸ்டேட், பங்குச் சந்தை , ஜி.எஸ்.டி வரிகளைக் குறைத்து மக்களை நியாயமான இடங்களில் முதலீடு செய்ய அனுமதிப்பதே. நிதி நிறுவனங்களை அரசின் கூட்டுறவிலே செய்ய முடியும் எனும்படி சட்டத்தை மாற்ற வேண்டும். அது ஒரு பாதுகாப்பை அளிக்கும். இப்போது நடப்பது அரசு அதிகாரிகளின், 'அரசியல்வியாதிகளின்' உதவியுடன் நடக்கும் பகற்கொள்ளை