நிர்வாகிகள் தமக்குள்ள தொடர்புகளைக் கொண்டே எழுத்தாளர்களை தேர்வு செய்வார்கள். இதில் வியப்படைய ஒன்றுமில்லை. பரிந்துரை, செல்வாக்கு, அரசியல் என்றெல்லாம் குழப்பிக் கொள்ள ஒன்றுமில்லை. நான் இத்தனை ஆண்டுகளாக பெங்களூரில் இருக்கிறேன். அண்மையில் இங்கு நடந்து முடிந்த இரு தமிழ் இலக்கிய விழாக்களுக்கும் என்னை அழைக்கவில்லை. தமிழ்நாட்டில் இருந்தெல்லாம் படைப்பாளிகளை பஸ் வைத்து, கார் வைத்து அழைத்தார்கள். இந்த பிரம்மா இலக்கிய விழா கூட என் வீட்டுக்கு ரெண்டு கிலோமீட்டர் தொலைவிலே தான் நடக்கிறது. அவர்களுக்கு என் பெயரில் ஒரு படைப்பாளி இருப்பதோ, நான் தேசிய விருது பெற்றிருப்பதோ, நாவல், கவிதைத்தொகுப்பு, சிறுகதைத்தொகுப்பு, மொழியாக்கம், உரைநடை என நாற்பதுக்கும் மேல் நூல்கள் வெளியிட்டுள்ளதோ அவர்களுக்குத் தெரியாது. ஆனால் என்னைப் பொருட்படுத்தவே இல்லை.
அதற்கு நான் ஒன்றுமே பண்ண முடியாது. அவர்களிடம் போய் என் ரெஸ்யூமை எல்லாம் கொடுக்க முடியாது. அவர்களுடைய தொடர்பு எல்லைக்குள் நான் இல்லாததால் நான் இல்லாமலும் போகமாட்டேன்.
எந்த வருத்தமும் இல்லை! கடுப்பு மட்டும் தான்.
பி.கு: அழைக்கப்பட்டுள்ள எழுத்தாள நண்பர்களுக்கு என் அன்பார்ந்த வாழ்த்துகள்!