// Ramesh Manickam
5.0 out of 5 starsVerified Purchase
எனது பார்வையில்......
Reviewed in India on 14 October 2021
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நண்பர் அபிலாஷின் கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள் நாவலை கிண்டிலில் படிக்க வாய்த்தது.
இது ஒரு துப்பறியும் நாவல். துப்பறியும் நாவல் என்றாலே, வாசகனை துப்பறிவாளனாக்கி விடுவதில்தானே அதன் வெற்றியிருக்கிறது. அதில் ஆசிரியர் வெற்றி பெற்றிருக்கிறார் என்று சொல்ல துணிகிறேன்.
கதையை நீங்கள் இப்படி அணுகலாம்.இப்போது ஒரு பெரிய கேன்வாஷை கற்பனை செய்து கொள்ளுங்கள். கதையின் ஆரம்பத்தில் கை விரல்கள் காட்டப்படுகிறது. விரல்கள் ஒவ்வொன்றாய் வெட்டப்படுகிறது. தனித்தனியாக ஒவ்வொரு விரலும் வெட்டப்படுகிறது. அனைத்தும் வெட்டப்பட்ட பிறகு, வெட்டப்பட்ட இடத்தில் இருந்து இரத்தம் கசிவதை உணர்கிறீர்கள். ஆம் வெட்டப்பட்டவை உங்கள் விரல்கள் தான். அங்கு வழிவது உங்கள் இரத்தமேதான்.
இப்போது உங்களுக்கு ஒரு திறப்பு ஏற்படுகிறது. மீண்டும் மெல்ல நடந்ததை ஒரு முறை ஓட்டிப் பார்க்கிறீர்கள். நிகழ்வுகள் ஒவ்வொன்றாய் அடுக்கப்படுகிறது. ஒவ்வொரு நிகழ்வு நடந்து கொண்டிருக்கும் போதும் நீங்கள் கதையின் தலைப்பை நினைவுபடுத்திக் கொள்ள தூண்டப்படுவீர்கள் அல்லது உங்கள் நிகழ்காலம் உங்களை அங்கே செலுத்தும்.
நிகழ்வுகளில் தொடர்பின்மையும் அல்லது ஒன்றுக்கு ஒன்று ஒட்டாத தன்மையும் சிறிய அளவில் நெருடுகின்றது. ஆனாலும் கதையின் சுவாரசியத்தில் பெரிய அளவில் குறைவில்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.
கதையை படித்து முடித்து பின்னர் எனக்கு ஜெயமோகனின் "இரவு" நாவல் நினைவிற்கு வந்தது. பார்வையாளனாய் வந்து
இரவு வாழ்க்கைக்கு பழகி விடும் கதாநாயகனை போல், இந்த சமூகம் நம்மை, நம் தனிப்பட்ட வாழ்க்கையை எவ்வளவு பாதிக்கின்றது?, எங்கே நாம் main stream வாழ்க்கையிலிருந்து விலகுகிறோம் ?,விலகியதிலிருந்து எப்படி நாம் பெரும்பான்மை வாழ்க்கைக்கு திரும்புகிறோம்? என்பதையும் நாமே சிந்திக்கவும் வழிவகை செய்கிறது.
வாய்ப்பிருப்பின் ஒருமுறை பிழை திருத்தம் செய்யவும். இறுதியாக வாழ்த்துகள் அபிலாஷ்! //
கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்: நாவல் (Tamil Edition)