இன்றைய நாவல் வகுப்பில் பிளாஷ் கார்ட் பயன்படுத்தி கதையமைப்பை உருவாக்க சொல்லிக்கொடுத்தேன். அதற்காக துண்டு காகிதங்களைக் கொண்டு அசோகமித்திரனின் "தண்ணீர்" நாவலின் பிரதான காட்சிகளை எழுதினேன். பக்காவாக 11 காட்சிகளில் முடிந்துவிட்டன. இவற்றின் துணைக்காட்சிகளும் விவணைகள், சம்பாஷணைகளுமே மொத்த நாவல். அசோகமித்திரனின் நாவல்கள் கச்சிதமாக இருக்க காரணம் அடிப்படைக் காட்சிகளை குறைவாக வைத்துக் கொள்வதுதான்.
இன்னொரு சுவாரஸ்யம் கடைசி காட்சியை அவர் தேர்தெடுத்தது. அதற்க்ய் என்றே ஒரு தனி அர்த்தம். நம்மில் பெரும்பாலானோர் சாயாவின் வாழ்வில் வரும் மாற்றம், வறட்சியின், தண்ணீர் பற்றாக்குறையின் முடிவையே கிளைமேக்சாக வைத்திருப்போம். ஆனால் அசோகமித்திரன் வில்லன் பாத்திரத்தின் கார் சேற்றில் சிக்கிக் கொள்வதை வைத்தார். (பார்க்க ஸ்கிரீன்ஷாட்)
இந்த காட்சிகளின் அடுக்கை மாற்றினாலே கதையின் அர்த்தம் மாறிவிடும். இதைப் பற்றியும் வகுப்பில் பேசினேன்