ஒரு நாவலை எழுதும் ஒவ்வொருவரும் சூப்பர் மேன், சூப்பர் வுமன் தான். அவர்கள் காலத்தையும் வெளியையும் மீறி சென்று புதிய உலகையும், அதற்கான நியாயங்கள், காலங்களையும் உருவாக்குகிறார்கள். தம் பாத்திரங்களின் உள்ளும் புறத்தையும் அறிந்திருக்கிறார்கள். பத்து சிக்கலான வாழ்க்கைகள் ஒன்றையொன்று சந்திக்கும் போது எப்படியான மாற்றங்கள் நேரும் எனத் துல்லியமாக தெரிந்திருக்கிறார்கள். அதனாலே நீட்சே குறிப்பிட்ட அதிமனிதன் குறித்த விளக்கம் நாவலாசிரியர்களுக்கே பொருந்தும் என நினைக்கிறேன்.
புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share