ஆர். அபிலாஷ் தமிழில் நன்கு அறியப்பட்ட ஒரு புனைவெழுத்தாளர். சாகித்ய அகாடெமி யுவ புரஸ்கார் மற்றும் பாஷா பரிஷத் உளிட்ட விருதுகளைப் பெற்றவர். 40க்கும் மேற்பட்ட நாவல், சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, நாடகம் மற்றும் கட்டுரை நூல்களை எழுதியவர். இவர் ஒரு தொழில்முறை ஆங்கில பேராசிரியர் ஆவார். இவர் ஆங்கிலத்தில் நாவல் எழுத்துக்கலை வகுப்புகளை கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக பல்கலைக்கழக அளவில் நடத்தி வருகிறார். நாவல் எழுதும் கலை குறித்து ஒரு புத்தகத்தையும் எழுதி வருகிறார். இவரைப் பற்றி மேலும் அறிய: https://ta.wikipedia.org/wiki/ஆர்._அபிலாஷ்
ஆர். அபிலாஷ் ஒரு கல்வியாளர். அவர் நாவல் எழுதும் கலை வகுப்புகளை நடத்தி அனுபவம் பெற்றவர்.
அடிப்படையான தகுதி: தமிழில் ஒரு சில பத்திகளாலான ஒரு புனைவை எழுதி அனுப்ப வேண்டும். அது ஒரு கதை அல்லது அத்தியாயத்தின் பகுதியாக இருக்கலாம். அதை நீங்களே சுயமாக எழுதியிருக்க வேண்டும். குறைந்தது 250 வார்த்தைகளில் இருந்து அதிகம் எவ்வளவு சொற்கள் வேண்டுமெனிலும் இருக்கலாம். இதை அவர்கள் abilashchandran70@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இந்த சமர்ப்பித்தலின் அடிப்படையில் பங்கேற்பாளர் இந்த பயிற்சி வகுப்புக்கு தேர்வு செய்யப்படுவார். தேர்வானவர்களுக்கு மின்னஞ்சல் வழியாக தெரிவிக்கப்படும். (நீங்கள் தேர்வாகாத பட்சத்தில் உங்கள் கட்டணம் திரும்ப அனுப்பப்படும்.)
பயிற்சி வகுப்பில் பங்குபெறுவதற்கான அடிப்படை தேவைகள்:
- மடிக்கணினி அல்லது மொபைல் போன்
- இணையத் தொடர்பு
பயிற்சி வகுப்பில் கலந்துகொள்வதற்கான அடிப்படையான மனத்தகுதி:
- தொடர்ந்து எழுதி ஒரு எழுத்தாளனாக வெற்றிபெறும் விருப்புறுதி
- நேரந்தவறாது வகுப்பில் கலந்துகொள்ளும் ஒழுக்கம்
- தரப்படும் இடுபணிகளை நேரத்துக்கு முடித்து சமர்ப்பிக்கும் ஆர்வம்
பயிற்சி வகுப்பறை நெறிகள்:
- நேரந்தவறாது இணைந்துகொள்ள வேண்டும்.
- அமைதியான சூழல் வேண்டும்.
- உங்கள் மைக்கை ம்யூட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
- பேச வேண்டுமெனில் கையுயர்த்தும் பொத்தானை அழுத்தி முறையாக அனுமதி பெற்றே கேள்விகளைக் கேட்கவோ கருத்துக்களை சொல்லவோ வேண்டும்.
- சக-பங்கேற்பாளர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும். அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் எந்த தொந்தரவும் கொடுக்கலாகாது.
பயிற்சி வகுப்பின் குறிக்கோள்கள்:
1) நாவல் எனும் எழுத்து வடிவத்தின் அடிப்படையான விதிகளை கற்பித்தல்
2) நேர-மேலாண்மை, சுயமேம்பாட்டுத் திறன்களை பயிற்றுவித்து ஒரு ஆக்கவளமிக்க எழுத்தாளராக பங்கேற்பாளரை மாற்றுதல்
3) நாவல் எழுத்துப்படியை திருத்தி செறிவாக்குகிற திறனை போதித்தல்
4) திருத்தப்பட்ட நாவல் எழுத்துப்படியை பதிப்பாளர் ஒருவரிடம் சமர்ப்பித்து ஏற்றுக்கொள்ள செய்வதற்கான அடிப்படைகளை கற்பித்தல்; அதற்கான வழிமுறைகளை காண்பித்தல்.
பயிற்சி வகுப்பின் பயன்கள்:
இப்பயிற்சி வகுப்பின் முடிவில்:
1) நீங்கள் நாவல் எனும் புனைவு வடிவத்தின் அடிப்படைகளைக் கற்றுக் கொள்வீர்கள்.
2) தொடர்ந்து தினமும் எழுதி வருடத்திற்கு குறைந்தது ஒரு புத்தகத்தையாவது வெளியிடும் ஒழுக்கத்தையும் நேரமேலாண்மைத் திறனையும் வளர்த்துக் கொள்வீர்கள்.
3) உங்கள் நாவல் படைப்பை திருத்தவும் அதற்கான திட்டவரைவைக் கொண்டு பதிப்பாளரிடம் கதையை சொல்லி கவர்வது எப்படி என்றும் தெரிந்து கொள்வீர்கள்.
4) பயிற்சிப் பாட வகுப்புகளில் கலந்துகொண்டவர்கள் தமக்குத் தரப்பட்ட இடுபணிகளை முடிக்கும் பட்சத்தில் அவ்வருட முடிவுக்குள் அவர்கள் தமது நூலை வெளியிட்டு வாசகர்களிடம் கொண்டு சேர்க்கவும் செய்வார்கள்.