பெண்களின் குற்றங்களைப் பற்றி, பெண் சார்பு, பாரபட்ச திருமண, வரதட்சிணை, வன்கொடுமை தடுப்பு சட்டங்களைப் பற்றி பேசினால் பெண் வெறுப்பாளன் என முத்திரை குத்துகிறார்கள். பெண்ணைப் பிடிக்கலைன்னா அதை அறுத்துக்கோ என பேஸ்புக்கில் சில பெண்களே எழுதுகிறார்கள். (இதே மொழியை ஒரு ஆண் பயன்படுத்தினால் அவனை சிறையில் தள்ளி விடுவார்கள். சரி அது போகட்டும்!) என்னைப் பொறுத்தவரையில் இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை - பெண்ணியம் வளர்ந்த வந்த ஆரம்ப காலங்களில் பெண்ணியவாதிகளை பொது சமூகம் ஆண் வெறுப்பாளர்கள் என்றே அழைத்தது. அந்த கால படங்களில் இவ்வாறே பெண்ணுரிமை போராளிகள் அடையாளப்படுத்தப்பட்டார்கள். ஆனால் அடுத்தடுத்த பத்தாண்டுகளில் பெண்ணியம் இயல்பாக்கம் செய்யப்பட்டது. தாராளவாத சந்தைப் பொருளாதாரமும் சமூக இயக்கங்களும் பெண்ணிய விழுமியங்களை நவீன வாழ்வின் கட்டாயங்களில் ஒன்றாக்கின. அப்போது ஆண்களும் பெண்ணியம் பேச ஆரம்பித்து போலி பெண்ணியவாதிகள் ஆகினர். ஆண் வெறுப்பாளன் எனும் பட்டம் மறைந்தது. இதுவே இப்போது ஆண் உரிமை பேசும் ஆண்களுக்கும் நடக்கிறது. அவர்கள் 'பெண் வெறுப்பாளர்கள்' ஆகிறார்கள். ஆண்களோ நான் உண்மையைத் தானே பேச்னேன், நான...