Skip to main content

Posts

Showing posts from December, 2022

"அச்சே தின்" - ஒரு அறிமுகம்

  இந்த புத்தகத்தை நான் சிறுகுறிப்புகளாக கடந்த சில ஆண்டுகளாக எழுதி வந்தேன் . ஆனால் ஒரு முழு புத்தகமாக தொகுக்கும் போது ஒரு பயம் எட்டிப்பார்த்தது . அந்த பயம் ஒரு பெரும் அச்சமாக உருவெடுத்தது .  நான் இந்நூலை எழுத ஆரம்பித்த போது இந்துத்துவத்தை எதிர்க்கிறவர்கள் கண்டிக்கப்படுவதும் மிரட்டப்படுவதுமே நடந்தது , அது பின்னர் விசாரணை , சிறைவாசம் , படுகொலைகள் என பலவிதமான தண்டனைகளின் வடிவெடுத்தது , இப்போது எதிர்க்கிறவர்கள் எல்லா இடங்களில் இருந்தும் முழுமையாக காணாமல் அடிக்கப்படுகிறார்கள் . இந்துத்துவத்தை எதிர்க்கிறவர்கள் இன்று தேசத்தை எதிர்க்கிறவர்களாக , ஒரு பொது துரோகியாக கட்டமைக்கப்படுகிறார்கள் ; மக்கள் இந்த கட்டமைத்தலை எந்தளவுக்கு உள்வாங்கி உள்ளார்கள் என்றால் அதைத் தமது இயல்பான சுபாவமாக மாற்றிக்கொண்டுள்ளார்கள் . நான் இப்போது வாழ்ந்து வரும் மாநிலத்தில் இந்த அரசை விமர்சிக்கிறவர்களை முன்பை விட மிக மிகக் குறைவாகவே காண்கிறேன் . முன்பு வெளிப்படையாக சாடியவர்கள் இன்று அமைதி காக்கிறார்கள் . அவர்கள் தம்மை யாரோ கண்காணிப்...

நாடிருந்தும் அகதி வாழ்க்கை

இம்மாதமும் ஜனவரியிலும் சென்னையில் என்னென்னமோ இலக்கிய நிகழ்வுகள் தொடர்ந்து நடக்கின்றன. நான் சென்னையில் இருந்திருந்தால் இவற்றில் சிலவற்றிலாவது கலந்துகொண்டிருப்பேன். நண்பர்களுடன் அளவளாவி இருப்பேன். இப்போது கூட வரலாம், ஆனால் தங்குவதற்கு இடமில்லை. இப்போதே மாதம் ஒருமுறை சென்னைக்கு கட்டாய பயணம் இருக்கிறது, அதற்காகவே ஒவ்வொரு முறையும் ஒரு நண்பரின் வீட்டுக்குப் போய் பாத்ரூம் பயன்படுத்தி அவர்களுடன் தேநீரோ சிற்றுண்டியோ அருந்திவிட்டு கிளம்பிவிடுகிறேன். இப்படி உதவி கேட்டு தங்கிய பிறகு மீண்டும் அவர்களைத் தொந்தரவு பண்ண முடியாது. அடுத்து இன்னொரு நண்பர் அல்லது புதிய நண்பர். இதனிடையே வேறு விசயங்களுக்கு அங்கே வருகையில் என்னை ஹோஸ்ட் செய்ய யாருமில்லை. ஜனவரியில் ஒரு நீதிமன்றத்தில் ஆஜராகும் பயணம் வருகிறது. அதற்கடுத்த வாரமே என் புத்தக வெளியீட்டை உயிர்மை நடத்துகிறது. அதற்கு மீண்டும் யார் வீட்டில் தங்குவதற்கு கேட்பதெனத் தெரியவில்லை. பண நெருக்கடி வேறு கடுமையாகிக் கொண்டே வருகிறது.  எதற்குடா பெங்களூருக்கு வேலை வாங்கி வந்தோம் என அலுப்பாக இருக்கிறது! அங்கேயே இருந்திருந்தால் என் வாழ்வில் இவ்வளவு துன்பங்கள் ஏற்பட்ட...

ஒரு சிறுதவறும் சனியும்

2017ஆம் ஆண்டு நான் வேலை செய்து கொண்டிருந்த நிறுவனத்தில் கடும் நெருக்கடி. எனக்கு அங்கிருக்கவே பிடிக்கவில்லை. பல இடங்களில் வேலைக்கு முயன்று கொண்டே இருந்தேன். பெங்களூரிலும் தான் வேண்டாவெறுப்பாக முயன்றேன். இங்கே கிடைத்தது. சென்னையில் இங்குள்ள ஊதியத்தில் பாதி கிடைத்தால் கூட போதும், எந்த வேலையென்றாலும் போதும் என்றே நினைத்தேன். இன்னும் ஆறு மாதங்கள் பொறுத்திருந்தால் கிடைத்திருக்கலாம். ஆனால் பொறுமையில்லை. அதுதான் நான் அன்று செய்த தவறு. அத்தவறு என் வாழ்க்கையை இன்று தலைகீழாக்கி விட்டதே என நான் நோகாத நாளில்லை.  நான் பெங்களூருக்கு வருவதா வேண்டாமா என முடிவெடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த போது, ஜெயமோகனை அழைத்து அவரது அறிவுரையைக் கேட்டேன். உன் மொழி காதில் கேட்காத ஊரில் போய் இருக்காதே, ஒரு எழுத்தாளனுக்கு அது நல்லதல்ல என்றார். நான் அவருடைய அறிவுரையைக் கேட்டிருக்க வேண்டும். கேட்கவில்லை.  ஒரே ஒரு சிறிய முடிவு. என் மொத்த வாழ்க்கையும் சர்வ நாசமாகி விட்டது. நிம்மதி, மகிழ்ச்சி போய் விட்டது. இதே போல ஒரு 'சிறிய' முடிவை எடுத்து இந்த ஊரில் இருந்தே கிளம்பி சென்னைக்கு வரும்படியாக நிகழ்ந்தால் எவ்வளவு ...

தரவுகளையும் கதைகளையும் எப்படி நாவலாக மாற்றுவது?

ஈழத்தை சேர்ந்த இளம் எழுத்தாளர் ஒருவர் இக்கேள்வியை என்னிடம் எழுப்பியிருந்தார் . அவர் ஈழப்போரின் பின்னணியில் ஒரு அடித்தட்டு   மனிதரின்   நிஜக்கதையை நாவலாக எழுதவுள்ளதாகவும் , அதற்காக நிறைய தரவுகளையும் , நேர்முகங்களைக் கண்டு பதிவு பண்ணியுள்ளதாகவும் , இத்தகவல்களையும் உணர்வுகளையும் எப்படித் தொகுத்து நாவலாக எழுத ஆரம்பிப்பது என்று வினவினார் . நான் அவரிடம் சொன்ன சில விசயங்களை உங்களில் இளம் நாவலாசிரியர்களுக்கு பகிர்வது பயனுள்ளதாக இருக்குமென நம்புகிறேன் .  ஏதாவது ஒரு பாத்திரத்தை தேர்வு பண்ணி அவரது பார்வையில் கதையைச்   சொல்லுங்கள் . அப்பாத்திரம் உங்கள் மனதுக்கு நெருக்கமாக , வித்தியாசமாக இருக்க வேண்டும் . அப்பாத்திரத்தின் மொழியில் ஒரு தெறிப்பு , ஒரு ஜீவன் இருக்க வேண்டும் . அப்பாத்திரத்துக்கு இந்த உலகைப் பற்றி சொல்ல ஒரு தனி கதை இருக்க வேண்டும் . நான் சொல்வதை நீ கேட்டுத்தான் ஆக வேண்டும் என கழுத்தைப் பிடித்துக் கோரும் அளவுக்கு அப்பாத்திரத்துக்கு ஒரு கதை சொல்லும் கட்டாயம் இருக்க வேண்டும் . என்னுடைய ...