தமிழ் சிறுகதைகளை - ஒரு வசதிக்காக - இரண்டாகப் பிரித்தோமெனில் குடும்ப உறவுகள், காதல் போன்ற செண்டிமெண்டலான கதைகள் என்று ஒரு பக்கமும், தனமனித-சமூக உறவின் முரண்களை, அபத்தங்களைப் பேசும் கதைகள் என வகைப்படுத்தலாம். இதில் சமூகத்தின் இடத்தில் இயற்கையை, வரலாற்றை, தொன்மங்களை, வன்முறையை, அறத்தை வைத்துப் பேசிய பரீட்சார்த்த கதைகளும் உண்டு. கணேசகுமாரன் இதற்கு வெளியே நோயாலும், வேறு உளவியல் சிக்கல்களாலும் சிதைவுறும் மனித உடலுக்கும் / சுயத்துக்கும் இருத்தலுக்குமான உறவு குறித்த சில முக்கியமான கதைகளை எழுதியிருக்கிறார். அதுவும் குறிப்பாக அவர் தன் அனுபவங்களில் இருந்து எழுதிய, சமகாலத்தவரின் தாக்கம் இன்றி எழுதிய படைப்புகள் எனக்குப் பிடித்தமானவை. குறிப்பாக 'மெனிஞ்சியோமா'.
கணேசகுமாரனுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்!