இன்று ஒரு தெருச்சண்டையை பார்த்தேன் . ஒரு கடையின் அகன்ற வாசல் , அதை ஒட்டிய அகலமான நடைபாதை . ஒரு பக்கம் இருபது பசங்க . எதிரில் இன்னொரு கூட்டம் பசங்க . நடுவில் சண்டையிடும் ரெண்டு இளைஞர்கள் . ஒரு பையன் புல் ஓவர் அணிந்திருக்கிறான் . இன்னொருவன் பார்மலாக ஆடையணிந்திருக்கிறான் . முதல் பையன் இவனை மூஞ்சியிலே நான்கைந்து குத்துகள் குத்துகிறான் . இவனோ எகிறி எகிறி முன்னே போய் அடிவாங்கிக் கொண்டிருக்கிறான் . அவனுடைய நண்பர்கள் அவனை இழுத்துக் கொண்டு போகிறார்கள் . இங்கு ஒதுங்கி நிற்கும் போதும் அவனுடைய முகம் சிவந்திருக்க கையை முறுக்கிக் கொண்டு என்னை விடுறா என்று கூறுகிறான் . " எதற்கு போய் திரும்பவும் முகத்தில் குத்து வாங்கவா ?" என்று எனக்குள் சிரித்துக் கொண்டேன் . நான் அந்த பையன் அடிவாங்காதிருக்க என்ன பண்ணியிருக்க வேண்டும் என யோசித்தேன் : அவன் செய்த முதற் தவறு முன்னே முன்னே சென்று கொண்டிருந்தது . ஒருவர் நம்மை அடிக்க வரும் போது வலதுகாலை வலப்பக்கமாக நகர்ந்திட வேண்டும் . இப்போது அடிக்கிறவரின் குத்துக்கள் மி...