Midnight என்பது அண்மையில் அமேசான் பிரைமில் வெளியாகி உள்ள கொரியன் த்ரில்லர். நம்முடைய “பூவிழி வாசலிலே” கதை தான். ஊமைக் குழந்தைக்குப் பதிலாக இரண்டு காது கேளாத ஊமைப் பெண்கள்: அம்மாவும் மகளும். இவர்கள் எப்படி ஒரு புத்திசாலித்தனமான சைக்கோ கொலைகாரனிடம் இருந்து தப்பிக்கிறார்கள் என்பதே கதையின் ஒற்றை வரி. ரொம்ப பரபரப்பாக எடுத்திருக்கிறார்கள். ஆனால் ஒரு குழந்தைக் கதை போல, கார்டூன்தனமாகத் தோன்றி விடுகிறது.
இரண்டு சிறப்பம்சங்கள்:
அபாரமான அந்த கடைசித் திருப்பம் - 1) வில்லனின் சூழ்ச்சியில் இருந்து கற்றுக் கொண்டு அவனுடைய உத்தியைக் கொண்டே நாயகி அவனை வீழ்த்துகிறாள்.
2) ஸ்குவிட் கேம்ஸில் நடித்த வி ஹா ஜூனின் அபாரமான நடிப்பு.
இன்னும் கொஞ்சம் மெனெக்கெட்டிருந்தால் சிறந்த படமாகி இருக்கும். இதை விட “பூவிழி வாசலிலே” மேலானது!