ஒரு வாசகன் என்பதை விட அதிகமாக சகஎழுத்தாளனாகவே இவ்வாழ்த்தை தெரிவிக்க விரும்புகிறேன்.
ஜெயமோகனிடம் இருந்து கற்றுக் கொள்ள ஏராளம் உண்டு - சம்பாதிக்கும் வேலையில் ஒரு படைப்பாளி தன்னை தொலைத்து விடாமல் இருப்பது, பல சிக்கல்கள் கொண்ட கொந்தளிக்கும் மனத்தைக் கொண்டிருந்தாலும் அதை எழுத்தில் உலவ விட முடிந்தாலும் எழுத்தாளனாக நீடிக்க அம்மனத்தை கட்டுக்குள் வைத்திருப்பது, அதற்காக அன்றாட வாழ்க்கையை ஒரு ஒழுக்கத்துக்குள் வைத்திருப்பது, இலக்கியத்தில் நாம் நம்புவதை துணிந்து செயல்படுத்துவது, எதையும் மறைக்காமல் பேசுவது, ஒரு பிரதியை சிறப்பாகக் கொண்டு வர கடுமையாக உழைப்பது என...
ஜெ.மோவிடம் உள்ள இன்னொரு பாராட்ட்டத்தக்க இயல்பு தன்னை ஏற்காத படைப்பாளிக்கும் துன்பம் வரும் போத உதவ முன்வருதல். அதையும் நாம் பின்பற்ற வேண்டும்.
ஜெயமோகனின் சீடர்கள் அவரை பிரதியெடுக்காமல் மேற்சொன்ன இயல்பை பின்பற்றி இருந்தால் அவருடன் முரண்பட்டு மற்றொரு இடத்துக்கு சென்றிருப்பார்கள். துரதிஷ்டவடமாக அது நடக்கவில்லை. ஒருவரை நாம் நேசிப்பதை விட அவரை சரியாகப் பின்பற்றுவது முக்கியம். அதனால் ஜெமோவை சதா பழிக்காமல் அவரிடம் இருந்து எழுத்து வாழ்வை, கலையை கற்று, உரையாடி, கைகுலுக்கி நகர்வோம்.
என்றும் பிரியத்துக்குரிய ஜெயமோகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!