Skip to main content

சல்யூட்

 





ரோஷன் ஆண்டிரூஸின்மும்பைப் போலீஸ்எனக்குப் பிடிக்கும். குறிப்பாக அதன் கிளைமேக்ஸை அமைத்திருந்த விதம். ரோஷன் ஆண்டிரூஸுக்கு ஒரு புலனாய்வாளனின் பிறழ்வு, அதனால் அவன் செய்யும் குற்றம், அதனால் அவனுக்குள் நேரும் உள்போராட்டம் என்பதைப் பேச விருப்பம் அதிகம் என நினைக்கிறேன். அண்மையில் வந்துள்ளசல்யூட்டும்அப்படியானதே. போலீஸார் தாம் சரி என நம்பும் ஒன்றுக்காகவும், அரசியல் அழுத்தத்துக்காகவும் ஆதாரங்களைவிதைத்துஒருவரைக் குற்றவாளி ஆக்குவதே கதைக்களம். இந்த குழுவில் ஒரு இளம் அதிகாரி, நியாய தர்மத்தை நம்புகிறவர் இருக்கிறார் (துல்கர் சல்மான்), அவருக்கும் சக போலிஸ் அதிகாரிகளுக்கும் ஏற்படும் மோதலே படம். கூடவேதங்கப் பதக்கம்பாணியில் குடும்பத்துக்கும் லட்சியத்துக்குமான உணர்ச்சி மோதலும் (அப்பா vs மகனுக்குப் பதில் தம்பி vs அண்ணன்) வருகிறது. இது கதையை சிக்கலாக்குகிறது; நல்ல டிராமாவுக்கு வழிவகுக்கிறது. உண்மை நிலைநாட்டப்படுகிறதா இல்லையா என்பதை ஒரு திரில்லர் பாணியில் பரபரப்பாக இறுதிக் காட்சி வரை கொண்டு செல்கிறார்கள். இது வெகுவாக மெச்சத்தக்கது. ஆனால் படம் இறுதியில் அதிருப்தியளிக்கிறது. இரு தவறுகள் அதற்குக் காரணம்:


  1. யார் ஹீரோ, யார் வில்லன் என்பது இது போன்ற கதைகளில் தெளிவாக இருக்க வேண்டும். நாயகனை ஒரு துன்பியல் நாயகனாகக் கட்டமைத்தால் அவன் தன் பிழைகளால் சீரழிந்து மனம் அவதிப்பட்டு குற்றவுணர்வு கொண்டு அழிவதாகவோ தண்டனை பெறுவதாகவோ அமைக்க வேண்டும். அல்லது அவன் நல்லவனாகவே இருக்க வேண்டும். இப்படத்தில் துல்கரின் பாத்திரம் இரண்டும் கெட்டானாக இருக்கிறது. அது நம்மை அவரிடத்து அன்பும் இரக்கமும் கொள்வதைத் தடுக்கிறது. (ஆனால்மும்பை போலீஸில்இப்பிரச்சனை இல்லை.) ஒருவேளை அந்த அண்ணனின் பாத்திரத்தைக் கொண்டு வராமல் விட்டிருந்தால், நாயகனே பழியை ஏற்று அதனுடன் மோதி மெல்ல மெல்ல மீண்டும் வந்து நீதியை நிலைநாட்டுவதாக கதை அதன் பாட்டுக்கு ஒரு ஒழுங்கைப் பெற்றிருக்கும் என நினைக்கிறேன். இல்லாவிட்டால் துல்கரின் ஆல்டர் ஈகோவாக அவரது அண்ணனைப் படைத்து, அண்ணனைத் தீமையில் இருந்து காப்பற்ற முயன்று துல்கர் இறுதியில் அவரை பலிகொடுப்பதாகக் கொண்டு வந்திருக்கலாம். இந்த பாணியை மிஷ்கின்அஞ்சாதேவில்சரியாகக் கையாண்டிருப்பார். ரோஷன் ஆண்டிரூஸுக்கு இதை ஏன் யாரும் கதை விவாதத்தின் போது எடுத்துச் செல்லவில்லை
  2. ஒரு குற்றப்புலனாய்வு கதையின் முடிவில் பார்வையாளர்களுக்குத் திருப்தியளிக்கும் ஒரு விழுமியம், புரிதல் (சினிமா மொழியில்மெஸேக்’) வேண்டும். இதில்லாத படம் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தாது. மீண்டும் மிஷ்கினுக்கே வருகிறேன் - அவரதுயுத்தம் செய்யின்மையம் கண்காணிப்பின் அதிகாரம் மனிதர்களிடையே எப்படி தீமையை உண்டு பண்ணுகிறது என்பதே. படம் முடியும் போது ஒவ்வொரு மனித உடலாக மீட்கப்படுகிறது. அதன் நீதியே படத்தின் விழுமியம். அகிர குரசாவோவின் Stray Dog படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட ஶ்ரீகணேஷின்எட்டுத் தோட்டாக்களும்ஒரு நல்ல உதாரணம். அமைப்பின் மீது இரு தரப்பான ஆட்கள் கோபம் கொள்ளுகிறார்கள். ஒருவர் (வில்லன்) வன்முறையாக, அபத்தமாக எதிர்வினையாற்ற மற்றொருவரோ (ஹீரோ) அமைப்பு கோரும் ஒழுக்கத்துடன் பண்புடன் நடந்து கொள்ள வேண்டும், பொறுமை வேண்டும் எனக் கோருகிறார் (பேட்மேன் vs ஜோக்கர் பாணியில்). இதுஎட்டுத்தோட்டாக்கள்என்றால்ஸ்டிரே டாக்ஒரு இருத்தலிய கோணத்தில் மனிதனின் தேர்வுகளை அலசுகிறது. எந்த முடிவும் சரியே எனும் இடத்தில் இருக்கிறவரிடம் போலீஸின் துப்பாக்கி மாட்டினால் என்னவாகும் என்பதே ஒற்றை வரி. அது எந்த துப்பாக்கியானாலும் அதே கதை தான், ஆனால் போலீஸ் என்பதால் அது துப்பறியும் கோணத்தைப் பெறுகிறது. படத்தின் முடிவில் குரசாவோ கடைசி வரை நாம் எடுக்கும் முடிவுகளை உறுதியாக நம்பி அதனை சார்ந்து போராடுவதே நம் வாழ்வுக்கு அர்த்தமளிக்கிறது என்கிறார். இது அப்படத்தை சுவாரஸ்யமாகவும் அர்த்தம் பொருந்தியதாகவும் ஆகிறது. இன்று திரில்லர் படமெடுக்கும் பலர் இந்தஅர்த்தத்தைத்தான் தவற விடுகிறார்கள். ரோஷன் ஆண்டிரூஸும் இதே பிழையை செய்திருக்கிறார். படம் முடியும் போது பரிசு வெல்லாத லாட்டரி சீட்டை வாங்கிய உணர்வே நமக்குக் கிடைக்கிறது

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...