நம்பியாரின் உடல்மொழியும் குரலும் மிகிக்றி கலைஞர்களால் அவ்வப்போது பகடி செய்யப்படுவது . ஏனென்றால் அது தனித்துவமானது . தனது பாணியை திரும்பத் திரும்ப போலச்செய்து தேய்வழக்காக்கினார் . அதே நேரம் அவர் ஒரு அற்புதமான நடிகர் என்பதை அவரது கறுப்பு காலத்துப் படங்களில் இருந்து “ ஜெண்டில்மேன் ” வரை கவனிக்கையில் புரிகிறது . எம் . ஜி . ஆர் தனது “ நான் ஏன் பிறந்தேன் ?” நூலின் இரண்டாம் பாகத்தில் நம்பியார் பற்றி சில சுவாரஸ்யமான கதைகளை பகிர்ந்து கொள்கிறார் . அவற்றில் இரண்டு அவதானிப்புகள் முக்கியமானவை . நம்பியார் நாடக மேடையிலோ , படக்காட்சியிலோ ஒரு பாத்திரத்தைத் திரும்பி நோக்கும் போது கழுத்தை மட்டும் திருப்புவதில்லை , மொத்த உடலையும் இடுப்பில் இருந்து திருப்பிப் பார்ப்பார் . இது வேறு நடிகர்கள் செய்யாதது என்பதுடன் இது அவரது பாத்திரத்தின் தீமையான இயல்பை சித்தரிக்க உதவியது என்கிறார் . இது ஏன் என்று யோசித்தேன் . எவ்வளவு யோசித்தும் புரியவில்லை . ஆனால் எம் . ஜி . ஆர் சொல்வதில் உண்மையும் உண்டு தான் . இன்று காலையில் என்னுடைய ...