சுஜாதாவின் இந்த முதற் கதையில் அவரது மொழிநடை எவ்வளவு வித்தியாசமாக, பலவீனமாக இருக்கிறது - புதுமைப்பித்தனின் நடையை அவசரமாக காப்பி அடித்ததைப் போல. வழக்கமாக அவர் முதல் வரியிலேயே கதையை ஆரம்பித்து விடுவார், ஆனால் இதிலோ அவர் கதையை செட் செய்யவே ஒரு பக்கம் எடுத்துக் கொள்கிறார்.
இப்படி ஆரம்பித்தவர் போகப் போக அடுத்தடுத்த ஆண்டுகளில் தனக்கென ஒரு தனி நடையை, தனித்துவமான பாணியை உருவாக்கிக் கொண்டு விட்டார்.
பிறவிக் கலைஞன் என யாருமில்லை, எல்லாரும் மெல்லப் பயின்று சூழலின் அழுத்தத்தாலும் உழைப்பினாலும் உருவாகி வருகிறவர்களே என்பதற்கு ஒரு சான்று இது.
