சங்கிகளின் விஷமப் பிரச்சாரம்
அர்ஜுன் சம்பத்தைப் போன்ற இந்துத்துவ பாசிஸ்டுகளின் பிரச்சனை "அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்" என நடைமுறைப்படுத்துவது திமுக, இதன் மூலம் தாழ்த்தப்பட்டோர் கலாச்சார அதிகாரம் பெறுகிறார்களே எனும் பதற்றமே. பாஜக தொடர்ந்து பெயரளவுக்கு ஒடுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்தோருக்கு சில பதவிகளை அளித்து tokenism செய்து சோஷியல் எஞ்சனியரிங் மூலம் ஏமாற்றி சம்பாதித்த பெயரை திமுக வாங்கிக் கொண்டு போய் விடுமோ எனும் அச்சமே!
அதனாலே ஏற்கனவே பிராமணர் அல்லாதோர் தான் பெரும்பாலான கோயில்களில் பூசாரிகளாக உள்ளார்கள் என சங்கிகள் சப்பைக்கட்டு கட்டி கதறுகிறார்கள் - ஏற்கனவே உள்ள நடைமுறை தானே, அது சட்டமாகி நடைமுறைக்கு வந்தால் உமக்கு என்ன ஓய் கும்பி எரிச்சல்? அதிக பண வசூல் உள்ள கோயில்களில் இனி எந்த சாதியொனரும் பூசை செய்ய போட்டியிடுவார்கள், அது அந்தணர்களை பாதிக்கும் எனும் தவிப்பா? அல்லது சட்டம் தரும் ஆற்றலைக் கண்டு, சமத்துவமே இனி எதார்த்தம் என்பதைக் கண்டு அச்சமா? ஏன் சுற்றி சுற்றி வந்து ஒப்பாரி வைக்கிறீர்கள்? நேரடியா சொல்ல வேண்டியது தானே.
மசூதிகளிலும் தமிழில் தொழுகை எனும் கோரிக்கையை ஏற்கிறேன். இப்போதுள்ள நடைமறையைப் பற்றி எனக்கு முழுமையாகத் தெரியவில்லை. ஆனால் எப்படி இருந்தாலும் தமிழ்ப்படுத்தப்படுவதே இஸ்லாத்துக்கும் நல்லது - இஸ்லாத்தை நோக்கி கூடுதலான பொதுமக்களை அது ஈர்க்கும்.
அதே நேரம் இஸ்லாத்தைக் காட்டி சம்ஸ்கிருதமயமாக்கலை நியாயப்படுத்துவது, தமிழும் சமஸ்கிருதமும் இணையாகத் தோன்றி வளர்ந்த மொழிகள், ஒன்று தாய் மொழி, மற்றொன்று தந்தை மொழி எனும் வரலாற்றுத் திரிபை நிச்சயமாக ஏற்க முடியாது. சமஸ்கிருதம் பின்னாளில் தோன்றிய, மக்களால் பரவலாக பேசப்படாத பண்டித மொழி. ஆதியில் வழிபாடு நிக்ழ்ந்தது தமிழிலே. சமஸ்கிருதம் பின்னாளில் கொண்டு வரப்பட்டது என்பதே வரலாறு. அதென்ன தந்தை மொழி? தந்தை தேசம்? அதைக் கேட்டால் உடனடியாக நினைவுக்கு வருபவர்கள் நாஜிக்கள், ஹிட்லர் மற்றும் ஹிந்து மகாசபையினரும் கோட்சேவும். அவர்களுடைய மறைமுக ஏஜெண்டாக இங்கு பேசி வந்த பாரதியாரும். கடுமையாக கண்டிக்கப்பட வேண்டிய சொல்லாடல் இது. தாய்நாடு, தாய்மொழி என்பவை மட்டுமே அமைதிக்கும், அன்புக்கும் வழிவகுக்கும். மற்றவை பாசிசத்துக்கு பட்டுப்பாதையை விரிக்கும்!
இப்படியே திரித்துத் திரித்துப் பேசிக் கொண்டிருந்தால் ஒருநாள் மக்கள் கல்லை எடுத்து அடிக்கப் போகிறார்கள் மிஸ்டர் சம்பத்!