Skip to main content

பிக்பாஸில் இரு பெண்களின் தவிப்புகள்

 





 நான் இந்த பிக்பாஸ் பருவத்தின் எல்லா நாட்களையும் உன்னிப்பாய் பார்த்து வருகிறேன். பிக்பாஸ் வரலாற்றிலேயே ரொம்ப கோந்து அல்வா இந்த பருவமே. சிலநேரம் போட்டியாளர்கள் சொதப்புவார்கள், ஆனால் இம்முறை பிக்பாஸே பயங்கரமாக சொதப்புகிறார். எல்லா நாளும் சப்பெனப் போகிறது. அதைப் பற்றி பின்னர் எழுதுகிறேன். இப்போது சுச்சி மற்றும் அனிதாவின் ஆளுமையை, அவர்களின் ஆழ்மனத்தில் உள்ள ஆண் உருக்களைப் பற்றி பேசப் போகிறேன்.


எல்லாரையும் சுத்த விடுறேண்டா எனும் பயங்கரமான செயல்திட்டத்துடன், நோக்கத்துடன் உள்ளே வந்த சுச்சியின் நிலைமாற்றம் உங்களில் பலரையும் குழப்பி இருக்கும். துவக்கத்தில் தன்னம்பிக்கையாய் தெரிந்த அவர் இப்போது எந்த தன்மானமும் இல்லாதவராகத் தெரிகிறார். பாலாவால் தொடர்ந்து அவமதிக்கப்படும், பாலாவை தொடர்ந்து எரிச்சல்படுத்தும், வீட்டில் யாராலும் மதிக்கப்படாத ஒரு பலவீனமான ஆத்துமாவாக இருக்கிறார். இதில் ஒரு வியூகம் உள்ளதுதான்: எப்படி அர்ச்சனா வரும் போது பாச நாடகம் நடத்தி அனைவருக்கும்அம்மாஆகணும், விபூதி போடணும், கைகால் பிடிச்சு விடணும் என முழுத்திரைக்கதையையும் தயாரித்துக்கொண்டு வந்தார், வந்தபின் உள்ளே அதை எப்படி செயல்படுத்தியும் காட்டுகிறாரோ அப்படித்தான் சுச்சியும். ஆனால் சுச்சி ஒரு தனிமை விரும்பி; தனிமனுஷி. அவரால் விக்ரமன் பட திரைக்கதைக்கு அவரால் அர்ச்சனாவைப் போல நடிக்க முடியாது. ஆகையால் பாலாவை ஒருதலையாய் நேசிக்கும் அபலையின் வேடமே தனக்கு பொருத்தமென நினைக்கிறார். ஆனால் இங்கு ஒரு பிரச்சனை வருகிறது. அது ஒருஎழுதப்பட்ட வேடம்என அவரே மறந்து விடுகிறார்.


கடந்த சில அத்தியாயங்களைப் பார்க்கும் போது சுச்சியின் ஆளுமை பற்றி ஒரு வித்தியாசமான சித்திரம் கிடைக்கிறது:

அவர் ஒரு மத்திய வர்க்க பின்னணியில் இருந்து தன் திறமை மற்றும் உழைப்பினால் ஆர்.ஜெ, பாடகர் என மேலே வந்தவர். ஆனால் இந்த இரண்டு பணிகளிலும் அவரது குரலில் தொனிக்கும் துள்ளல், தன்னம்பிக்கை அவருடையது அல்ல. அது அவரது குரல், ஆளுமை அல்ல. அவரது குரலும் அவரும் ஒன்றல்ல.

 இயல்பில் சுச்சி ஒரு உள்ளொடுங்கிய, பலவீனமான உள அமைப்பு கொண்ட பெண். தனது தோற்றம் குறித்த ஒரு தாழ்வுணர்வு கூட அவருக்கு இருக்கலாம். இப்படியானவர்களால் தம்மை முன்வைக்காமல் ஒரு உறவில் இயங்க முடியாது. அதே நேரம் தம்மிடம் நியாயமாக இருப்பவர்களிடம் மிகுந்த கனிவுடன், அக்கறையுடன் இருக்க முடியும். இத்தகையோருக்கு தமது இச்சையை நம்பிக்கையுடன், வெளிப்படைத்தன்மையுடன் முன்வைக்க, பேச்சால், சாமர்த்தியத்தால் ஆண்களை வசீகரிக்க வராது. இந்த போதாமைகள் இவர்களை ஒரு வலுவான, ஆதிக்கமான ஆண் ஆளுமையை நோக்கி சாய வைக்கும். இந்த ஆண் ஆளுமை தந்தை உருவின் (father figure) மற்றொரு இளைய வடிவமாக இருக்கும். எந்தளவுக்கு இந்த ஆண் ஆளுமைகள் இப்பெண்களை கட்டுப்படுத்தி, விமர்சித்து, புறக்கணித்து ஒடுக்கிறார்களோ அந்தளவுக்கு இவர்கள் அதை உள்ளார ரசிப்பார்கள், கூடுதலாய் ஈர்க்கப்படுவார்கள். புறக்கணிப்பும் தவிர்த்தலும் அதிகமாக ஆக இவர்கள் கூடுதலாக இந்த ஆண் ஆளுமைகளிடம் அடிமையாவார்கள். ஒரு நொடி கண்பார்வைக்காக எந்தளவுக்கு துன்பத்தையும் அனுபவிக்க தயாராக இருப்பார்கள். இதை அவர்கள் உணர்ந்து திட்டமிட்டு அல்ல, தன்னியல்பாக தன்னெழுச்சியாக செய்வார்கள். என்ன செய்கிறோம் என உணரும் முன்பே ஒரு ஆணின் காலடியில் அமர்ந்து கண்ணீர் விடுவார்கள். இப்போதைக்கு அந்த தந்தை உரு அவருக்கு பாலா.


 ஆனால், மற்றொரு பக்கம், இந்த ஆண் ஆளுமை இவர்களது நாட்டத்தை ஏற்றுக்கொண்டு தமக்கு சமமாக அமர வைத்தால் அவர்களை இவர்கள் மறுநொடியே உள்ளுக்குள் வெறுக்கத் தொடங்குவார்கள். Metromale என்கிறோமே அத்தகைய மென்மையான, பெண்மை நளினம் கொண்ட, பண்பான, சமத்துவமான ஆண்களை நண்பர்களாக அன்றி இச்சைக்குரியவர்களாக இப்பெண்களால் காண முடியாது. ஏனென்றால் உள்ளுக்குள் இவர்கள் ஒரு இணையை அல்ல கண்டிப்பான நெகிழ்வான கம்பீரமான தந்தைக்காகவே ஏங்குகிறார்கள். இவர்களை ஒரு சர்வாதிகார ஆண் ஆளுமையால் சுலபத்தில் ஒடுக்கிட சுரண்டிட முடியும். தாம் பயன்படுத்தப்படுகிறோம் என்பதையே இவர்கள் அந்நேரம் உணர மாட்டார்கள்.

 சுச்சி லீக்ஸ் வந்த போது தனுஷும் அவரது கும்பலை சேர்ந்தவர்களும் தன்னை பலாத்காரம் செய்ததாக, வேறு பல பெண்களையும் அவர்கள் பயன்படுத்தியதாக சுச்சி செய்தி வெளியிட்டு பலத்த சர்ச்சைக்கு அது உள்ளானது. சுச்சியின் கணவர் அது உண்மையல்ல, தனது மனைவிக்கு மனநலம் சரியில்லை என்று சொன்னார். பின்னர் சுச்சியின் டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாகவும் சொன்னார்கள். எனக்கு இப்போது இந்த பிக்பாஸில் சுச்சியின் நடத்தையை பார்க்கும் போது, அக்குற்றச்சாட்டு உண்மையாகவிருக்க வாய்ப்புண்டு என்றே தோன்றுகிறது - சுச்சியின் இயல்புப்படி தன்னை அழிப்பவர்களிடம் சுலபத்தில் ஒப்புக்கொடுப்பவராக இருக்க வேண்டும், ஆனால் சற்று நேரத்திலே தான் பலியாக்கப்படுவது குறித்து கூடுதலாய் தன்னிரக்கம் கொண்டு, அந்த அநீதியின் பால் கோபம் கொள்கிறவராகவும் இருக்க வேண்டும். குறிப்பாக பிற பெண்கள் தன் துணையை அபகரிக்கக் கூடும் எனும் அச்சம் அதிகமாக ஆக அவர் இன்னும் அதிகமாய் தன்னை அடிமையாக்குபவராக இருப்பார் என நினைக்கிறேன். அதாவது பிற பெண்கள் எதிர்மறை உணர்வைத் தரும் ஆண்களிடம் இருந்து விலகி இருப்பார்கள் எனில் இவர்களோ அந்த எதிர்மறையில் இருந்தே தமக்கான மொத்த ஆற்றலையும் பெறுவார்கள். அதுவே அவர்களின் படைப்பூக்கத்தின், ஊக்கத்தின், ஆற்றலின் மூலாதாரமாக இருக்கும். இன்னொரு பக்கம் வேலை, சமூக வாழ்வு என வரும் போது துடிப்பாய் திறமையாய் தன்னம்பிக்கையாய் இவரால் செயலபடவும் முடியும்.

 சுச்சியின் தந்தை உரு சற்று எதிர்மறையான அதனாலேயே கூடுதல் வசீகரமான சாடிஸ்டிக்கான தந்தை உரு (கம்பை எடுத்து விளாசுகிற தந்தை; இத்தந்தையின் கோபத்தை பெறக் கூடாது எனப் பிரார்த்திக்கும், அதே நேரம் அவரது விளாசல்கள் இல்லாமல் அன்பு கிடைக்காது என நினைக்கிற சிறுமி அவர்). இதுவே அவரை தன்னழிவை ஏற்படுத்தும் உறவுகளை நோக்கி செலுத்தி, மனப்பிரச்சனைகளுக்கு வித்திடுகிறது.

அவருக்குத் தேவை வலுவான கம்பீரமான அதே நேரம் பாசமான ஒரு ஆண் துணை; மெல்ல மெல்ல எதிர்காலத்தில் தந்தை உருவென்பது ஒரு புறத்தோற்றம் மட்டுமே, அதற்கு சாரமில்லை, யாரையும் சார்ந்திருக்க வேண்டிய தேவை தனக்கில்லை என அவர் புரிந்து கொண்டு மீண்டு வருவார் என நம்புகிறேன். எதிர்மறையான இச்சையில், துய்ப்பில் இருந்து கிடைக்கும் இன்பத்தை தன்னால் கட்டுப்படுத்த முடிகிற ஒரு விளையாட்டாக அவர் எடுத்துக் கொள்ளத் தொடங்கினால் கூடுதல் மகிழ்ச்சியாக இருப்பார்.


அனிதா சம்பத்தை எடுத்துக் கொண்டால் அவரும் பாதுகாப்பான வலுவான தந்தை உருவை நாடுகிறார்; ஆனால் அத்தந்தையானவர் தொடர்ந்து அவரைப் பாராட்டுகிற, ஊக்கப்படுத்துகிற ஒரு செல்லத் தந்தை உரு. அந்த இடத்திலேயே அவர் தன் கணவரை வைத்திருக்கிறார். தொடர்ந்து அவரை போற்றிப் பாதுகாக்கும் பணியை இக்கணவர் செய்தபடி இருக்க வேண்டும். இல்லாவிடில் அனிதா உடைந்து போவார். வீட்டுக்குள் தன்னை சிறிதே கண்டிக்கிறவர்கள், விமர்சிக்கக் கூடியவர்களைக் கூட அவரால் தாங்க முடியாதது அவர் உள்ளுக்குள் இன்னும் வளராத ஒரு குழந்தை என்பதாலே. பெரும்பாலான நவீன இளம்பெண்கள் இத்தகையோரே என்பதைக் காண்கிறேன். ஷிவானி ஒரு உதாரணம். அவரிடம் பாலா சற்று கனிவாகப் பேசுவதைப் பார்க்கலாம். ஏனென்றால் அவர் அதையே பாலாவிடம் நாடுகிறார்

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...