Skip to main content

Posts

Showing posts from November, 2020

அதிகாரக் குவிப்பு, செலிபிரிட்டி கலாச்சாரம் - அழியும் இந்திய கிரிக்கெட் அணி

தற்போது நடந்து வரும் ஆஸ்திரேலிய பயணத்தொடரில் இந்திய அணி ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி-20 தொடர்களை நிச்சயமாய் இழக்கும் என முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவரான மைக்கேல் வாஹ்ன் சொல்லியிருக்கிறார். இதை ஏற்கிறேன். முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா காலங்காலமாய் சொதப்பியே வந்துள்ளது. டிரா செய்ய முடிந்தால் சிறப்பு. ஒட்டுமொத்தமாய் இந்த ஆஸி தொடர் ஒரு நேரவீண்.  இதை கோலியும் அறிவார். ஆனால் அவர் மனமெல்லாம் பிறக்கவிருக்கும் தன் குழந்தை மீதே இருக்கும். வேறெந்த நம்பிக்கையூட்டும் நற்செய்தியும் அவருக்கு வரும் மாதத்தில் இல்லை. ஏனென்றால், இந்த தொடர் அவசரமாய் திட்டமிடப்பட்டு, மோசமாய் அணி தேர்வு செய்யப்பட்டு மோசமாய் எடுக்கப்பட்ட அட்லி படத்தைப் போல உள்ளது.  ஷாமி, சஹல், சாஹா நல்ல உடல் தகுதியுடன் இல்லை. ஆனால் அவர்களை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து வந்த கிரிக்கெட் வாரியம் ரோஹித் ஷர்மா மட்டும் இந்தியாவில் அவர் பாட்டுக்கு திராட்டில் விட்டது ஏன் எனப் புரியவில்லை. ஒவ்வொரு வீரருக்கு ஒவ்வொரு நியாயமா எனும் கேள்விக்கு விடையில்லை. கோலி வழக்கம் போல இந்த அரசியலுக்கும் தனக்கும் சம்மந்தமில்லை என நழுவப் பார்க்கிறார...

பிக்பாஸின் ‘மாற்று’ அன்பு

கடந்த சில பல வாரங்களில் பிக்பாஸ் அர்ச்சனா அன்பின் பொருளையே தலைகீழாக மாற்றி விட்டார் . எந்தளவுக்கு என்றால் “ நீ ஏன் என்னோட அன்பை புரிஞ்சுக்க மாட்டேங்குற ?” என யாராவது கேட்டால் பிக்பாஸ் வீட்டுக்குள் “ இவன் ஏதோ திட்டமிடுறாண்டா ?” என கேட்கிறவருக்கு இப்போது தோன்றும் . அன்பு எனக் கேட்டால் நமக்கெல்லாம் பல் கூசும் அளவுக்கு , ஆனால் “ நீ ஏன் என் அன்பை புரிந்து கொள்ள மறுக்கிறாய் ” எனும் கேள்வி ஒரு மனுஷ்யபுத்திரன் கவிதையில் வருகிறதென்றால் அவ்வளவு நெகிழ்ச்சியாக இருக்கும் ! இரண்டுக்கும் இடையில் அன்பு என்பதன் பொருளே பெரிதாக கடந்த பத்தாண்டில் மாறியிருக்கிறது என்பதே சுவாரஸ்யம் .   பேஸ்புக் , டிவிட்டர் போன்ற சமூகவலைதளங்கள் , கார்ப்பரேட் வேலையிடங்கள் , மிகையை மேலும் மிகையாக்கி காலி பண்ணுகிற ஊடகங்கள் அன்பு , பிரியம் , வாழ்த்துகிறேன் , வருந்துகிறேன் , இரங்கல் போன்ற எத்தனையோ கனத்த சொற்களை கனமற்ற சோரம் போன சொற்களாக்கி விட்டன . “ தோழி ” என்ற சொல்லை எடுங்கள் - “ புது வசந்தம் ” படம் வந்ததில் இருந்து இன்று வரை அந்த சொல் ...

பிக்பாஸில் இரு பெண்களின் தவிப்புகள்

    நான் இந்த பிக்பாஸ் பருவத்தின் எல்லா நாட்களையும் உன்னிப்பாய் பார்த்து வருகிறேன் . பிக்பாஸ் வரலாற்றிலேயே ரொம்ப கோந்து அல்வா இந்த பருவமே . சிலநேரம் போட்டியாளர்கள் சொதப்புவார்கள் , ஆனால் இம்முறை பிக்பாஸே பயங்கரமாக சொதப்புகிறார் . எல்லா நாளும் சப்பெனப் போகிறது . அதைப் பற்றி பின்னர் எழுதுகிறேன் . இப்போது சுச்சி மற்றும் அனிதாவின் ஆளுமையை , அவர்களின் ஆழ்மனத்தில் உள்ள ஆண் உருக்களைப் பற்றி பேசப் போகிறேன் . எல்லாரையும் சுத்த விடுறேண்டா எனும் பயங்கரமான செயல்திட்டத்துடன் , நோக்கத்துடன் உள்ளே வந்த சுச்சியின் நிலைமாற்றம் உங்களில் பலரையும் குழப்பி இருக்கும் . துவக்கத்தில் தன்னம்பிக்கையாய் தெரிந்த அவர் இப்போது எந்த தன்மானமும் இல்லாதவராகத் தெரிகிறார் . பாலாவால் தொடர்ந்து அவமதிக்கப்படும் , பாலாவை தொடர்ந்து எரிச்சல்படுத்தும் , வீட்டில் யாராலும் மதிக்கப்படாத ஒரு பலவீனமான ஆத்துமாவாக இருக்கிறார் . இதில் ஒரு வியூகம் உள்ளதுதான் : எப்படி அர்ச்சனா வரும் போது பாச நாடகம் நடத்தி அனைவருக்கும் “ அம்மா ” ஆகணும் , விபூதி போட...