ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிக்க மாட்டார், அரசியலில் இருந்து ஓய்வெடுப்பதாய் என முடிவெடுத்திருப்பதாக இப்போது செய்தி வந்திருக்கிறது. இது உடல்நலம் சார்ந்த காரணங்களுக்காக (சிறுநீரக சிகிச்சை) என சொல்லப்பட்டாலும் அது முழுக்க உண்மையல்ல. ரஜினி இனி அரசியலுக்கு வருவது அவருக்கு நடைமுறையில் நல்லதல்ல என நான் ஏற்கனவே எழுதியிருந்தேன். ஆரம்பத்தில் தன்னால் கட்சி ஆரம்பித்து ஆட்சி அமைக்க முடியாவிடினும் மூன்றாவது அணியாக ஒரு அதிகார மையமாகத் தோன்றலாம் என அவர் நம்பியிருக்கலாம். ஆனால் வரக் கூடிய தேர்தலில் அதிமுக மட்டுமல்ல பாஜகவும் இங்கு பெருத்த தோல்வியை சந்திக்கும் என தகவல் போனதும் அவர் சுதாரித்திருப்பார். ஆனாலும் பாஜக, குருமூர்த்தியின் அழுத்தம் அவரை உடனடியாய் முடியாது என சொல்ல முடியாத அளவுக்கு தத்தளிக்க வைத்திருக்கும். கட்சி ஆரம்பித்து பிரச்சாரம் செய்தால் அரசியல்ரீதியாக அவர் பெறப்போகும் மக்கள் கோபமும், அடுத்த ஆளும் கட்சியினரின் வெறுப்பும் தன் மீது முதலீடு செய்துள்ள தயாரிப்பாளர்களுக்கு பாதகமாகும் என அவர் அறிவார். உ.தா., கட்சி ஆரம்பித்துள்ள கமலை விட கட்சியே ஆரம்பிக்காத ரஜினியே கடுமையான விமர்சனங்களை, எதிர்ப்பை சந்...