இன்று “நாயகன்” படத்தின் ஒரு பகுதியை சும்மா பார்த்துக்கொண்டிருந்தேன் - அப்போது தான் இதற்கும் “காலாவுக்குமான” ஒற்றுமை மீண்டும் நினைவுக்கு வந்தது. இப்போது இது வெறும் ஒற்றுமை அல்ல, ஒரு அரசியல், மீள்-சொல்லலின் அரசியல் எனப் பட்டது. பின்நவீனக் கதையாடல்களில் இப்படி மீள்சொல்வதற்கு ஒரு தனி இடம் உண்டு - இரண்டிலுமே தாராவியை நவீனப்படுத்தி சேரிகளை அப்புறப்படுத்தி அடித்தட்டு மக்களை வெளியேற்ற முயலும் பண முதலைகளை நாயகன் எதிர்க்கிற காட்சி உண்டு; இரண்டு படங்களின் திரைக்கதையிலும் இதுவே மையக்காட்சி (key incident). ஒரு மத்திய சாதி ஆள் தாதாவாகி அங்கு அதிகமாய் வசிக்கும் தலித்துகளைக் காப்பாற்றுகிறார் என்பதில் ஒரு போலியான அரசியல் வருகிறது. அப்படி ஒரு மானுடநேயத்தை முன்னிறுத்தும் போது பாதிக்கப்பட்ட மக்களின் agencyஐ மணிரத்னம் “நாயகனில்” பறித்து விடுகிறார். அதை மீட்டெடுப்பதே “காலா”. அங்கு தலித்துகளுக்கு ஒரு தலித் தலைமை அமைகிறது. அவர்களின் விடுதலையும் சாதி ஒருங்கிணைப்பில், ஒற்றுமையில், சுயமரியாதையில் பிறக்கிறது. வேலு வேலுபாய், வேலு நாயக்கர் ஆகும் முன்பு அங்கு ஒரு லோக்கல் தலைவர் இருப்பார் (விஜயன்). அவர் பணம் வாங...