கொரோனா பரவலைத் தடுப்பதற்கான ஒரு வழிமுறை நோய்க்குறியைக் கண்டறிந்து , அடையாளங் கண்டவர்களை தனிமைப்படுத்தி , சிகிச்சையளிப்பது (test, tract, isolate). ஆனால் இந்தியா போன்ற ஒரு பிரம்மாண்டமான மக்கள் தொகை கொண்ட தேசத்தில் இது சாத்தியமில்லை என்கிறார்கள் . இது ஒரு பச்சைப் பொய் . இவ்வளவு பெரிய மக்கள் தொகை கொண்ட நாட்டில் வீடுவீடாகப் போய் வாக்காளர் அட்டைக்காக தகவல் சேகரிக்க நம்மால் முடியும் ; அடுத்து தேசிய மக்கள் பதிவேட்டுக்காக அரசு ஊழியர்கள் , தன்னார்வலர்கள் , மாணவர்கள் கொண்ட ஒரு பெரும் படையை மத்திய அரசு ஒவ்வொரு குடிமகனும் வீட்டுக்கும் அனுப்பப் போகிறது ; அப்போதெல்லாம் சாத்தியமாகும் மனிதவளம் இப்போது மட்டும் இந்த அரசுக்கு இல்லை என்பது ஒப்பந்தத்தை மீறக்கூடாது எனும் அஹிம்சைக் கொள்கைக்காக சீனவீரர்களிடம் உருட்டுக்கட்டையால் அடிவாங்கி நம் ராணுவ வீரர்கள் செத்தார்கள் என்பதைப் போல இருக்கிறது .