“தவமாய் தவமிருந்து” பார்த்துக் கொண்டிருந்தேன். மூன்றரை மணி நேரப் படம். சோகத்தையும் செண்டிமெண்டையும் பிழிகிறார்கள். சண்டைக்காட்சி, நகைச்சுவை போன்ற திணிப்புகளோ வில்லனோ நாயகனுக்கான நேரடி சவால்களோ இல்லை. ஆனால் நேரம் போவதே தெரியாமல் பார்க்க வைக்கிறார்கள். அதற்கு ஒரு காரணம் சாமர்த்தியமான திரைக்கதை - பத்து நிமிடத்துக்கு ஒரு முறை ஒரு சிக்கல் வருகிறது – அதற்கான தீர்வு, அத்தீர்வு பயனளிக்கிறதா, இல்லையென்றால் வேறு என்ன தீர்வுகள் உண்டு என கதை நகர்கிறது.