இன்று MeToo குறித்து தமக்குள்ள விமர்சனங்களை வெளியே சொல்ல
ஆண் எழுத்தாளர்கள் பலர் தயங்குகிறார்கள். எதையாவது சொல்லப் போய் விழுந்து பிறாண்டி
விடுவார்களோ எனும் அச்சம். இதே அச்சம் இன்று பத்திரிகை எடிட்டர்களுக்கும் உள்ளது.
MeToo இயக்கத்தின் மீதான என் விமர்சனங்களை படிக்கும் எடிட்டர்கள் “உங்கள் தரப்பை, வாதத்தை
ஏற்கிறேன், முக்கியமான கருத்துக்கள் தாம், ஆனால் …. இதை வெளியிட்டால் திரித்து எங்களுக்கு
எதிராய் கடும் பிரச்சாரம் செய்வார்கள்” என்று பின்வாங்குகிறார்கள். அப்படியான ஒரு பீதிச்
சூழல்.
ஒரு அறிவுச்சூழலில் எந்த கருத்தின் மறுபக்கத்தையும் தர்க்கரீதியாய்
விவாதிக்க சுதந்திரம் வேண்டுமல்லவா? அது இன்று இல்லை. கருத்து சுதந்திரம் செத்து விட்டதாய்
நான் உண்மையில் உணர்வது இப்போது தான்.
MeToo போராளிகளே நீங்கள் ஜெயித்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்!
கருத்து சுதந்திரத்தைத் தடுப்பதில் உங்களுக்கும் பாஜகவுக்கும்
உள்ள ஒரே வித்தியாசம் நீங்கள் நேரடியாய் துப்பாக்கியை ஏந்தி இன்னும் யாரையும் சுடவில்லை
என்பது. மற்றபடி எல்லார் வாயையும் மூடி விட்டீர்கள். சிறப்பு!