![90à®à®³à®¿à®©à¯ தமிழ௠à®à®¿à®©à®¿à®®à®¾ / 90galin Tamil Cinema (Tamil Edition) by [à®à®°à¯. à®
பிலாஷ௠/ R. Abilash]](https://images-eu.ssl-images-amazon.com/images/I/51zUDE21yaL.jpg)
1. ஒரு புனைகதை எழுத்தாளராக இருந்துகொண்டு சினிமாவைப்
பற்றி கட்டுரைகள் எழுதுவது என்ன மாதிரியான அனுபவத்தைக் கொடுக்கிறது?
ஆர். அபிலாஷ்: நான் முழுநேர
சினிமா விமர்சகன் அல்ல. நான் ஆர்வம் கொள்ளும்
பல்வேறு துறைகளில் சினிமாவும் உண்டு. ஒரு எழுத்தாளனாய் நான் மாறுபட்ட கோணங்களை, புதிய மொழி ஒன்றை, எனக்கான உணர்வுநிலையை சினிமா விமர்சனத்துக்குள் கொண்டு வருவதாய்
நம்புகிறேன். உதாரணமாய், தொண்ணூறுகளில் இருந்து ரெண்டாயிரத்தின் முற்பகுதி வரையிலான
படங்களில் ஒருவித ஒடுக்கப்பட்ட ஆண்மை சித்தரிக்கப்பட்டதை, புரொமேன்ஸ் பேசப்பட்டதை, சொல்ல முடியாத காதலின் அவஸ்தையை நம் சினிமா காட்சிப்படுத்தியதைப்
பற்றி என் சினிமா கட்டுரைகளில் விவாதித்திருக்கிறேன். அதாவது, என் சமூக, பண்பாட்டுக் கட்டுரைகளில், புனைவுகளில் பேச முடியாத சில விசயங்களை சினிமாவை மையம் கொண்டு
என்னால் பேச முடிந்திருக்கிறது.
2. ஏதோவொரு கலைவடிவம் மக்களிடையே பிரசித்தி பெற்றதாக இருந்து வந்துள்ளது. இன்று அனைவராலும் பேசப்படும் ஒரு கலையாகச் சினிமா இருப்பது பற்றிய உங்கள் கருத்து?
ஆர். அபிலாஷ்: இது சினிமா ஊடகத்தின்
காலம். நான் ரெண்டாயிரத்தின் துவக்கத்தில்
இயக்குநர் ராமை சந்தித்த போது “இனிமேல் படைப்புச்செயல்கள் காட்சி
ஊடகம் வழியாகவே நிகழும். எழுத்து பின்னுக்கு நகர்ந்து விடும்”
என்றார். ஓரளவுக்கு அவர் சொன்னதே இன்று நடந்து
வருகிறது. என் கல்லூரியில் இளம் எழுத்தாளர்களை விட இளம் இயக்குநர்களை,
இளம் புகைப்பட கலைஞர்களையே அதிகம் காண்கிறேன். மேலும் இன்றைய தலைமுறைக்கு காட்சிபூர்வமாய் சிந்திப்பது இயல்பாகவும் வருகிறது.
இன்னொரு பக்கம், தமிழகம் என்றுமே சினிமாவை கொண்டாடிய
மாநிலமே. இங்கு சினிமாவில் இருந்து அரசியல் ஆளுமைகள் மற்றும்
தலைவர்கள் தோன்றுவது இன்றும் தொடரும் ஒரு பாணி. கமல்,
ரஜினி, விஜய், பாரதிராஜா,
அமீர், ராம் என நிர்வாக அரசியல், தமிழ் தேசிய அரசியல் என பேசுகிறவர்கள் இன்றும் இருக்கிறார்கள். அவர்களின் ஒவ்வொரு சிறு சொல்லும் இங்கே பெரும் அதிர்வுகளை ஏற்படுத்துகிறது.
சினிமாவில் வலுவான இடம்பெற்றிராத, இரண்டாம் நிலை
நடிகையாய் சில காலம் தொடர்ந்த கஸ்தூரி அரசியல் பேசினால் கூட கோடிக்கணக்கானோர் காதுகொடுத்துக்
கேட்டு முகநூலில் சர்ச்சிக்கிறார்கள்.
ஏன் இந்தளவு சினிமா மோகம் நம்மவர்களுக்கு என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. இதன் ஒரு நல்விளைவு கடந்த பத்தாண்டுகளில் நம் சினிமா தொழில்நுட்ப ரீதியாய் பல முக்கிய திரை கலைஞர்களை, படைப்புகளை கொடுத்துள்ளது. மலையாளத்தில் ஒரு பி.ஸி ஸ்ரீராமோ மணிரத்னமோ மிஷ்கினோ ராமோ இல்லை. அவர்களின் சந்தோஷ் சிவன் கூட அதிகமும் வெளிமாநிலங்களிலே வேலை செய்திருக்கிறார். நல்ல திரைமொழியை கொண்டிருந்த பத்மராஜனுக்கு கூட அங்கு வழித்தோன்றல்கள் இல்லை. நாடகத்தை வித்தியாசமான கதை அமைப்புடன் எடுப்பதே இன்றும் மலையாள சினிமா. அதில் உளவியல் நுணுக்கங்கள் உண்டு; வாழ்க்கைப் பார்வை உண்டு. ஆனால் சினிமா மொழி இல்லை. “மகேஷிண்டே பிரதிகாரம்” ஆர்வமூட்டும் கதை ஆழம் கொண்ட படம் தான். ஆனால் அது சினிமா இல்லை. வசனங்களை விடுத்து கதை சொல்ல இன்றும் மலையாளிகளுக்குத் தெரியாது.

ஆக, தமிழரின் சினிமா வெறி சில நல்ல விளைவுகளைத்
தந்திருக்கிறது.