| ஏ.கெ ராமானுஜன் |
ஒரு சுட்டெரிக்கும் மதியப்பொழுதில்
வீடு திரும்பும் அவன்
எங்கும் எங்கும் அம்மாவைத் தேடுகிறான்.
அவள் அடுக்களையில் இல்லை, புழக்கடையில்
இல்லை, அவள் எங்குமே இல்லை,
அவன் தேடினான், தேடினான், கடும்
பதற்றத்தால் பீடிக்கப்பட்டான்.
கட்டிலடியில் தேடினான், அங்கு
அவன் பழைய ஷூக்களையும் அழுக்குருண்டைகளையும் கண்டான், அம்மாவை அல்ல.
அம்மா என அலறியபடி வீட்டை விட்டு
ஓடினான்.
எங்கிருக்கிறாய்? நான் வீட்டுக்கு
வந்து விட்டேன். எனக்கு பசிக்கிறது!
ஆனால் பதில் இல்லை, வெயில் சுடரும்
பாழடைந்த தெருவில்
ஒரு எதிரொலி கூட இல்லை. திடீரென
அவனுக்கு நினைவு வந்தது
தனக்கு வயது அறுபத்து ஒன்று என
மேலும் தனக்கு நாற்பது வருடங்களாய்
அம்மா இல்லை என.
(Uncollected Poems and Prose:
R.K Ramanujan; ed. Molly Daniels-Ramanujan and Keith Harrison, Oxford India
Paperbacks)