Skip to main content

Posts

Showing posts from June, 2017

அசோகமித்திரன்: “ஏன் என்னைப் போய் பார்க்க வரீங்க?” -

   அசோகமித்திரனுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. இலக்கிய அறிமுகம் இல்லாதவர்களும் அவரைப் படிக்கலாம். யாரும் சுலபத்தில் நுழையும் அளவுக்கு லகுவான கதைமொழி அவருடையது. ஆனால் இலக்கியத்தை நுணுகி வாசித்து பழகாதவர்களுக்கு அவரது கதையை படித்து முடித்ததும் கூட்டத்தில் ஏதோ ஒரு மிருதுவான பெண் உடலை உரசிய உணர்வு இருக்கும். கையில் கிட்டியும் கிட்டாத ஒரு நுணுக்கமான அனுபவமாக அவரது கதை தோன்றும். இலக்கிய எழுத்துக்கள் பழகும் முன்னரே அவரை வாசிக்க துவங்கிய எனக்கு இந்த உணர்வு தான் ஏற்பட்டது. அவரது எளிமையான, அலங்காரமற்ற, அங்கதமும் கரிப்புணர்வும் கலந்த மொழி வெகுவாக கவர்ந்தது.

மற்றொரு மட்டமான சர்ச்சை

மனுஷி பாரதிக்கு யுவ புரஸ்கார் அளிக்கப்பட்டதை ஒட்டி ஒரு சிலர் உருவாக்கும் சர்ச்சை அபத்தமாகவும் மட்டமாகவும் உள்ளது. மனுஷி எழுதுவது காகிதக் குப்பை, தட்டையான எழுத்து என முத்திரை குத்துகிறார் இளங்கோ கிருஷ்ணன். ஒரு வாசகனாக அவரது குறுகின மனப்பான்மையை தான் இது காட்டுகிறது. எனக்கு இந்த மதிப்பீட்டு முறை (அப்படி ஒரு முறைமை இதற்கு இருக்குமென்றால்) ஆச்சரியம் அளிக்கவில்லை.

ஷங்கர்: உருமாறும் உடல்களின் அழகியல்

   சிவாஜி, எம்.ஜி.ஆர், எம்.ஆர் ராதா காலத்தில் இருந்தே மனித வாழ்வின் சீரழிவு, மீட்சி, மலர்ச்சி ஆகியவற்றை உடல்களில் நிகழ்த்திப் பார்க்கும் ஆர்வம் நமக்கு இருந்துள்ளது. அதனாலேயே திறமையும் அழகும் மிக்க நாயகன் நோய் (ரத்தக்கண்ணீர் (1954), தெய்வமகன் (1969)) அல்லது வறுமை (பராசக்தி (1952), கப்பலோட்டிய தமிழன் (1961), நல்ல நேரம் (1972)) அல்லது சதியால் (பராசக்தி, பாசமலர் (1961), உத்தம புத்திரன் (1958), அடிமைப்பெண் (1969), ஆயிரத்தில் ஒருவன் (1965), நாடோடி மன்னன் (1958), எங்க வீட்டுப் பிள்ளை (1965), குடியிருந்த கோயில் (1968), மலைக்கள்ளன் (1954), மதுரைவீரன் (1956)) நொடிந்து, உருமாறி சீரழிந்து போன நிலையில் தோன்றி போராடுவது அல்லது தன் நிலையை எடுத்துரைத்து பார்வையாளர்களை உருக வைப்பது இங்கு ஒரு வெற்றிகரமான பார்முலாவாக இருந்துள்ளது.

தீப்தி நேவலின் கவிதைகள்

  தீப்தி நேவலை ஒரு நடிகையாக அறிவேன். ஆனால் சமீபத்தில் நூலகத்தில் இந்திய ஆங்கிலக் கவிதைகளின் அலமாரியில் இப்பெயரில் ஒரு கவிதைத் தொகுப்பை (Black Wind and Other Poems) கண்டெடுத்து புரட்டிய போது அவர் (இந்தி மாற்று சினிமாவின் நட்சத்திரமாக எண்பதுகளில் திகழ்ந்த) நடிகை தீப்தி என நான் ஊகிக்கவில்லை. பெயர் தெரியாத கவி என நினைத்து வாசித்து பிரமித்தேன்.

"கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்": பொன் மகேஸ்வரன் குமார்

வணக்கம் அண்ணா , உங்களுடைய " கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள் " நாவல் படித்தேன் ... நாவல் அருமை . ஏதோ கணக்கு போட்டு கதையோட கடைசில அதுக்கு விடை கண்டு பிடிக்கிற மாதிரி எழுதாம ,   விடையை , படிக்கிறவங்களையே முடிவு பண்ண வச்சிருந்தது வித்தியாசமாகவும் நன்றாகவும் இருந்தது . இதுல இன்னொரு விஷயம் நான் புரிஞ்சிகிட்டது என்ன ன்னா , முடிவை பார்வையாளர் கிட்ட குடுக்குறதால ,   நாவலை மறுபடியும் படிக்கும் எண்ணம் இயல்பாக உருவாக்கப் படுது . அதுவும் உள்ளுக்குள்ள சில விடயங்கள் ரொம்ப த்ரில் ல்லா இருக்குற தால இன்னும் கூடுதல் சிறப்பு ..  

திரும்புதல் - ஏ.கெ ராமானுஜன்

ஏ.கெ ராமானுஜன் ஒரு சுட்டெரிக்கும் மதியப்பொழுதில் வீடு திரும்பும் அவன் எங்கும் எங்கும் அம்மாவைத் தேடுகிறான். அவள் அடுக்களையில் இல்லை, புழக்கடையில் இல்லை, அவள் எங்குமே இல்லை, அவன் தேடினான், தேடினான், கடும் பதற்றத்தால் பீடிக்கப்பட்டான். கட்டிலடியில் தேடினான், அங்கு அவன் பழைய ஷூக்களையும் அழுக்குருண்டைகளையும் கண்டான், அம்மாவை அல்ல. அம்மா என அலறியபடி வீட்டை விட்டு ஓடினான்.