இன்மையை இனி பிளாகாக படிக்கலாம். Custom domainஐ நீக்கி விட்டோம். இப்போதைக்கு இதழ்களை நேரடியாக கிளிக் செய்ய வேண்டாம். பக்கவாட்டில் உள்ள பகுப்புகளை கிளிக் செய்து நுழைந்து படைப்புகளை படிக்கலாம். (இதழ்கள் இன்னும் பழைய முகவரியின் தொடுப்பில் உள்ளன. அவற்றை விரைவில் சீர் செய்து விடுகிறோம்)
நண்பர்கள் ஆசிரியக் குழுவில் இணைந்து கவிதைகளை தேர்வது, தொகுப்பது, பிரசுரிப்பது ஆகிய பணிகளில் உதவினால் இன்மையை தொடர்ந்து நடத்தலாம். கடுமையான கால நெருக்கடி காரணமாய் என்னாலோ சர்வோத்தமனாலோ மாதாமாதம் இன்மையை கொணர இயலவில்லை. குறைந்தது ஒரு வாரமாவது தினமும் உழைத்தாலே ஒரு இதழை செம்மையாய் கொணர முடியும். அது இப்போதைக்கு சாத்தியமில்லை.
ஒரு இதழ் தொடர்ந்து வெளிவரும் போது அதற்கு என தனியாக புது எழுத்தாளர்கள் உருவாவார்கள். அவர்களுக்கு இதழ் ஒரு உயிர்நாடியாக அமையும். இன்மையிலும் அவ்வாறு சில கவிஞர்கள் இயங்கினார்கள். இன்மையை நின்று போன பின் அவர்களில் சிலர் வேறெங்கும் எழுதாமல் போனது எனக்கு வருத்தமளித்தது. ஆனால் இதழை முடிந்தளவு ஆத்மார்த்த ஈடுபாட்டுடன் கொண்டு வந்தோம் என்பதில் திருப்தியுள்ளது. என்னைப் பொறுத்தவரையில் இன்மை ஒரு இனிய நிகழ்வே.
மீண்டும் இன்மை ஒருநாள் உயிர் பெறும் என நம்புகிறோம். அதுவரை பழைய இதழ்களை இங்கு படிக்கலாம்.
http://inmmai.blogspot.in/p/blog-page.html