சென்னை-28 படத்தில் வரும் ஆம்புலன்ஸ்
காட்சி சமகால மனநிலைக்கு ஒரு உதாரணம். ஆம்புலன்ஸில் கிரிக்கெட் ஆடுவதற்கான உபகரணங்களுடன்
ஆம்புலன்ஸ் டிரைவர் வருகிறார். அவர் ஏதோ ஆஸ்பத்திரிக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில்
உள்ள நோயாளியை கொண்டு வருகிறார்கள் என மக்கள் ஒதுங்கி வழி விடுகிறார்கள். ஒதுங்கி வழி
விடும் நல்லவர்கள் இந்த தலைமுறையில் வாழும் போன தலைமுறையினர். அந்த ஆம்புலன்ஸ் டிரைவரும்
அவன் நண்பர்களும் சமகால மனநிலையின் பிரதிநிதிகள்.
ஒதுங்கி வழி விடும் நல்லவர்களில் இளைஞர்களும்
வயதானவர்களும் இருப்பார்கள். எல்லாவற்றையும் விளையாட்டுத்தனமாய் காணும் பிடிப்பற்ற
தலைமுறையில் வயதானவர்களும் இருப்பார்கள். இது ஒரு மனநிலை. ஒரு போக்கு. வயதுக்கும் இதுக்கும்
சம்மந்தம் இல்லை.
குறிப்பு: மேலே உள்ள யுடியூப் லிங்கில்
23: 40வில் வரும் காட்சி