Skip to main content

ஞானக்கூத்தனுக்கு அஞ்சலி

ஞானக்கூட்டத்துக்கு ஆழ்ந்த அஞ்சலி.

Image result for ஞானக்கூத்தன்

நான் நவீன கவிதையை படிக்க துவங்கிய காலத்தில் நண்பர்கள் ஞானக்கூத்தனை சிலாகித்து பாராட்டுவதை கேட்டிருக்கிறேன். ஆனால் நான் அவரை அப்போது படிக்க தவறவிட்டேன். ஆங்கில இலக்கிய படிப்பு எனக்கு பல நவீன ஐரோப்பிய கவிஞர்களை அறிமுகப்படுத்தியது. அதன் பிறகு நான் அப்பின்புலத்தில் தமிழின் நவீன கவிஞர்களை அறிமுகப்படுத்திக் கொண்டேன். இவர்களுக்கு பிறகு தான் ஞானக்கூட்டத்தின் மொத்த கவிதைத் தொகுப்பை எடுத்து வாசித்தேன். இயல்பாகவே எனக்கு ஏமாற்றமாக இருந்தது. எனக்கு ஞானக்கூத்தன் ஒரு நவீன கவிஞரே அல்ல எனப் பட்டது. நவீன கவிதையின் வளர்ச்சிக்கு வைரமுத்து, மேத்தா, அப்துல் ரகுமானுக்கு கூட ஒரு பங்கு உண்டென சொல்வேன். கலீல் கிப்ரான் கூட நவீன கவிதை வாசகனுக்கு முக்கியமானவர் தான். ஆனால் ஞானக்கூத்தன் இவர்களுக்கு வெகுபின்னால் இருக்கிறார். அவர் எழுதியவை ஒருவித செவ்வியல் தனிப்பாடல்கள். சற்றே லகுவான நேரடி மொழியில் எழுதப்பட்ட மரபுக் கவிதைகள். அவரது பகடியும் எனக்கு வெகுசிலாக்கியமாய் பட்டதில்லை.


அதன் பிறகு அவர் கவிதையியல் பற்றி எழுதின நூலை படித்தேன். சம்ஸ்கிருத ரசா கோட்பாட்டை கவிதையியலாக மாற்றும் முயற்சி. எனக்கு அந்நூல் அதிருப்தி அளித்தது

எப்போதுமே ஒரு எழுத்தாளனுக்குள் முரண்பட்ட பண்பாடுகளின் குறுக்கீடு நிகழ வேண்டும். வாசிப்பு அல்லது வாழ்க்கை மூலமாக. உதாரணமாய் ரொம்ப மரபார்ந்த ஆள் இடதுசாரி சிந்தனைகளின் ஆட்பட்டாலோ அல்லது இறுக்கமான நவீன மனம் ஒன்று மரபார்ந்த இலக்கியம் அல்லது மதம் நோக்கி ஈர்க்கப்பட்டாலோ. அல்லது அசோகமித்திரனுக்கு நிகழ்ந்தது போல்  எதார்த்த வாழ்வு அவருக்குள் இருக்கும் லட்சியவாதங்களை முறியடித்தாலோ இது நிகழலாம். அப்போது படைப்பூக்கம் கிளர்ச்சி பெறும். புது சிந்தனைகள் தோன்றும். இதற்கு மற்றொரு சிறந்த உதாரணம் புதுமைப்பித்தன். ஞானக்கூத்தனுக்குள் இது நிகழவில்லை என தோன்றுகிறது. பட்டுப்புழுவாகமே வாழ்ந்து விட்டார். அல்லது தான் சந்தித்த எதிர்நிலைகளை அவர் எளிய பகடிகள் மூலம் கடந்து சென்று விட்டார். அப்படியான பகடிகளில் நான் ரசித்தது நாய்
=====
காலம் கடந்துண்ணும் எதிர்மனைப் பார்ப்பான்
எச்சிற் களையைத் தெருவில் எறிந்தான்
ஆள் நடவாத தெருவில் இரண்டு
நாய்கள் அதற்குத் தாக்கிக் கொண்டன
ஊர் துயில் குலைத்து நாய்கள் குரைக்கவும்
அயல்தெரு நாய்களும் ஆங்காங்கு குரைத்தன
நகர நாய்கள் குரைப்பது கருதிச்
சிற்றூர் நாய்களும் சேர்ந்து குரைத்தன
நஞ்சை புஞ்சை வயல்களைத் தாவிக்
கேட்கும் குரைச்சலின் குரைச்சலைக் கேட்டு
வேற்றூர் நாய்களும் குரைக்கத் தொடங்கின
சங்கிலித் தொடராய்க் குரைத்திடும் நாய்களில்
கடைசி நாயை மறித்துக்
காரணம் கேட்டால் என்னத்தைக் கூறும்?
:
இதில் இந்தபார்ப்பான்என்ற சொல்லின் அரசியல் பற்றி நிறைய விமர்சிக்கப்பட்டிருக்கிறது என்றாலும் இன்றைய மீடியா கூச்சல் யுகத்துக்கு பொருத்தமான கவிதை தான் இது. அதே நேரம் இந்த பகடியும் ஆழமான ஒன்றல்ல. அதை விட எனக்கு சு.ராவின் இக்கவிதை சிறந்த பகடி என தோன்றுகிறது.

எனக்குத் தெரிந்த பூனை ஒன்று
நேற்று இறந்தது
சவ அடக்கத்துக்கு
நாங்கள் போயிருந்தோம்
என் நண்பனின் மனைவி
அழத் தொடங்கியபோது
என் மனைவியும் அழுதாள்
குழந்தைகள் அழுதன
சில வார்த்தைகள் பேசும்படி
என் நண்பன் என்னைக் கேட்டுக்கொண்டான்
நான் பேசத் தொடங்கினேன்:
'இந்தப் பூனையின் மியாவ் மியாவ்
வேறு பூனைகளின் மியாவ் மியாவிலிருந்து
வித்தியாசமானது
மேலும்...

இக்கவிதையில் பகடி வெறும் வெட்டி சர்ச்சை பற்றியல்ல ஒரு பண்பாட்டின் அபத்தமான பேச்சு மரபை பற்றியது. இதிலுள்ள நுணுக்கமான அபத்தம் ஞானக்கூத்தனில் இல்லை.


Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...