(இது தினமலரில் நான் எழுதி வரும் பத்தி. முக்கியமான இணையதளங்கள், பிளாகுகள், பேஸ்புக் பக்கங்களை அறிமுகம் செய்கிறேன்.) சொல்வனம் (www.solvanam.com) ஒரு பெட்டிக்கடையில் என்னென்ன கிடைக்கும்: வாழைப்பழம், பிஸ்கட், கடலைமிட்டாய், புளிப்பு மிட்டாய், சிகரெட், கொசுவத்தி, பத்திரிகை…. ஆனால் எங்கள் ஊரில் பெட்டிக்கடைகளில் பழரசமும் கிடைக்கும். இன்னும் சொல்வதானால் அவை பீடா கடையாகவும் இயங்கும். சென்னையில் ஒரு டாஸ்மாக் அருகே உள்ள ஜூஸ் கடையில் மாலையில் அதிகம் விற்பவை மாங்காய் துண்டுகளும், பிளாஸ்டிக் கோப்பைகளும். இப்படி தொடர்பற்ற பல தேவைகளை திருப்தி செய்யும் பெட்டிக்கடை தான் இலக்கிய இணைய பத்திரிகைகள்.