Skip to main content

ஆண்-பெண் உறவில் சமத்துவம் தேவையா?

( பர்தா அணிவதன் சுதந்திரம் குறித்த எனக்கு ஜீவிக்குமான விவாதத்தின் அடுத்த பதிவு இது.)
வணக்கம் அபிலாஷ்,
       நீங்கள் இந்த விவாதத்தை உங்கள் வலைத்தளத்தில் பகிர்ந்ததை பார்த்ததும் மீண்டும் ஆர்வம் தொற்றிகொண்டது. விவாதத்தை தொடரலாம்.
     
பர்தாவை விரும்பித்தானே அணிகிறார்கள் என்கிறீர்கள். அந்த விருப்பம் அவர்களுடையது தானா என்பது தான் இங்கு கேள்வி... 
நண்பகள் ஷேர் ஆட்டோவில் ஒருபெண் அந்த இஸ்லாமிய பெண்ணிடம் எப்படிங்க இத போட்டு இருக்கீங்க புழுக்கமா இல்லையா என்று கேட்டார்.. ஆமாங்க புழுக்கமா தான் இருக்கு ஆனா என்ன பண்றது என்றார். அந்த பெண்ணுக்கு பர்தா அணிவது ஒன்றும் புதிதல்ல. அவர் எத்தனையோ மே மாதங்களை பார்த்திருப்பர், அவருக்கு அதில் கஷ்டம் எதுவும் இல்லை. அந்த தருணத்தில் அதை அணிவது அவருக்கு வசதிப்படவில்லை. ஆனால் அவரால் அதை கழட்டி வீசமுடியாது. இது அவர் விருப்பம் தானா?(இது சமரசம் என்றால் இந்த சமரசத்தை நாம் எவ்வளவு காலம் ஆதரிக்க போகிறோம்?)

    
அவர்களை பார்க்கையில் வரும் கொந்தளிப்பும் கருணையும் நமக்கானதாகவே இருக்கலாம். அந்த கொந்தளிப்பின் பயன் யாருக்கானது என்பது என் கேள்வி?        பெண்களுக்கான சொத்துரிமை பெரியார் கேட்டது அவருக்கான கொந்தளிப்பாகவே இருக்கலாம்..   பெண்கள் அதை நினைத்துகூட பார்த்திருக்காமல் இருக்கலாம். இன்றுவரை அது சில பெண்களுக்கு மட்டுமே உதவுவதாக கூட இருக்கலாம்.ஆனால் அதுவும் இல்லை என்றால் இவர்கள் யாரும் தெருவில் இறங்கி போராடபோவதில்லை. வேறு வழியின்றி  அவர்களுக்கு சேரவேண்டிய சொத்தை விட்டு கொடுத்திருப்பார்கள். அவர்களை கட்டாயப்படுத்தாமல், அவர்கள் நலன்களுக்கான கருணை அவசியமென்றே தோன்றுகிறது .
தாலியோ, பர்தாவோ அவை சொல்வது ஒன்று தான். It signifies/ensures the control men have over women. தாலி மறுப்பு திருமணமாக இருக்கட்டும்,தாலி அகற்றும் போராட்டமாக இருக்கட்டும். அதில் அதிகம் கொந்தளித்தது ஆண்கள் தான். பெண்கள் அதை எளிதில் கடந்து சென்றுவிடுவார்கள். என் அம்மா தொலைக்காட்சி விவாதங்களை பார்த்துவிட்டு 'இப்ப உலகமே modern ஆயிட்டு வருதுபோல' என்று கூறிவிட்டு அதை எளிதில் கடந்து சென்று விட்டார். தாலியை பெண்கள் புனிதமாகவோ , பண்பாடாகவோ, உரிமையாகவோ கருதவில்லை. இது இல்லை என்றால் இந்த உலகம் என் ஒழுக்கத்தை கேள்வி கேட்கும் அதனால் இதை அணிகிறேன். பெண்களின் பார்வை இவ்வளவே
ஆனால் என் அண்ணன், தம்பிகளால்(வளர்ந்துவரும் படித்த தலைமுறை) அப்படி அதை எடுத்துகொள்ள முடியவில்லை.  பண்பாடு, கலாச்சாரம், இறைநம்பிக்கை என்று அவர்களுக்கே அர்த்தம் புரியாத வார்த்தைகளால் தாலியை ஆதரித்தார்கள். அதை எதிர்த்து பேசும் பெண்களை வசைபாடினார்கள். இதற்கு காரணம், அவர்களுடைய அதிகாரம் உடைவதில் இருக்கும் பயம். They are feeling very insecure there. 
ஒருமுறை மனுஷிய புத்திரன்,  தாலி கட்டுவதை நிறுத்திவிட்டால் பெண்கள் விடுதலை அடைந்துவிடுவார்கள் என்று கூறியதாக கேள்விப்பட்டேன். அதற்கு அர்த்தம் தாலியுடன் இருக்கும் பெண்கள் எல்லாம் அடிமைகள். தாலி இல்லாத பெண்கள் விடுதலை அடைந்தவர்கள் என்பது இல்லை. அவர் அங்கே தாலியை ஒரு குறியீடாக பார்க்கிறார் எனவே அதை தாக்குகிறார்.இது பர்தாவுக்கும் பொருந்தும் என்று நினைகின்றேன்
இங்கு நிலவி வரும் சுழலில் ஏன் இஸ்லாமை பற்றியோ, பெண்களின் உரிமை பற்றியோ விவாதிக்க முடியவில்லை என்பது புரிகிறது. எனது கேள்வி எல்லாம் அதை ஆதரிப்பதுதான்.(இஸ்லாமிய தனி சட்டத்தை ஆதரிக்கிறோம் என்று, அதில் இருக்கும் gender inequality'  பார்க்க மறுப்பது.மறுப்பது கூட ஓகே. அதை நியாயப்படுத்துவது.
    சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதையில் ஒரு கதாபாத்திரம் கேட்கும்... "இஸ்லாம் வரதட்சணையை கூடதான் தடை செய்கிறது. இவர்கள் அதை பெறாமலா திருமணம் செய்துகொள்கிறார்கள்?". இப்படி மதங்கள் அனைத்தும் ஆண்களுக்கானவையாக  மாறும்போது, பர்தாவை வெறும் அடையாளமாக மட்டும் பார்க்க முடியுமா
இறுதியாக பெண்கள்(சல்மா போன்றோர்) அதை தங்கள் அடையாளமாய் பார்பதை ஏற்கிறேன் வரவேற்கிறேன். அனால் அது பெண்களின் அடையளமாக ஆண்களால் மாற்றபடுவதை ஏற்க இயலாது.
https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif
அன்புடன்
ஜீவி
அன்புள்ள ஜீவி
உங்கள் கூற்று முழுக்க உண்மை. ஏற்கிறேன். இஸ்லாமிய அல்லது இந்து சமூகங்களில் பெண்கள் குறைவான சுதந்திரத்துடன் உள்ளார்கள் என நான் மறுக்கவில்லை. ஆனால் சுதந்திரத்தின் அளவை யார் தீர்மானிப்பது, எது சுதந்திரம் போன்ற கேள்விகள் இன்னும் விடையளிக்கப்படாமல் உள்ளன. உதாரணமாய், தாலி இல்லாமல் வாழ்ந்தால் அது சுதந்திரமா? இரவில் ஒரு பெண்ணால் தனியாக நடக்க முடிந்தால் அது சுதந்திரமா? இது சம்மந்தமாய் சில கேள்விகள் எனக்கு உள்ளன
1)   மேற்சொன்ன இரண்டையும் செய்கிற ஒரு பெண்ணுக்கு குழந்தை பெற விருப்பமில்லை என்று கொள்வோம். ஆனால் கணவனுக்கு குழந்தை பெற ஆசை. அவள் இப்போது என்ன செய்ய வேண்டும். தன் சுதந்திரமே முக்கியம் என்றால் அவள் குழந்தை பெறவே கூடாது. ஆனால் அது அந்த ஆணின் சுதந்திரத்தை பறிப்பது ஆகாதா?
2)   நான் கல்லூரியில் மாணவர்களிடம் உரையாடும் போது அவர்கள் அடிக்கடி எழுப்புகிற கேள்வி பெண்களின் ஆடை பற்றியது. ஒரு பெண் எதற்காய் கவர்ச்சியாய் ஆடை அணிகிறாள்? ஆணை கவர்வதற்காகவா அல்லது தனக்காகவா? என்னை நான் அழகாக கருதுகிறேன், என்னை நானே ரசிக்கிறேன், அதற்காய் என்னை அலங்கரிக்கிறேன் என சில பெண்ணியவாதிகள் கூறலாம். ஆனால் எதிர்பாலின (அல்லது சுயபாலின) ஈர்ப்பு முக்கியமே அல்ல என அவர்கள் உறுதிப்பட கூற இயலுமா? முடியாது.
சொல்லப் போனால் பெண்கள் வெளியில் இருக்கும் போது சதா இந்த “அழகாக காட்டும்” கவனத்தோடே இருக்கிறார்கள். பெண்கள் நடப்பது, உட்கார்வது, பேசுவது, சைகைகள் செய்வது என அனைத்திலும் “செக்ஸ்” மிளிர்கிறது. இதை நாம் ஆண்களிடத்து பார்க்க இயலாது. ஆண்களை போல் எந்த அக்கறையும் இல்லாமல் ”பாலியல் சுதந்திரத்தோடு” ரோட்டில் நடக்க ஒரு பெண்ணால் முடிவதில்லை. பாலியல் சுதந்திரம் என நான் சொன்னது பாலியல் அக்கறையின்மை. ஒரு ஐம்பது வயதுப் பெண் கூட ஒரு இளைஞனிடம் பழகும் போது செக்ஸ் குறித்த பயத்துடனே இருக்கிறார். இது விசித்திரமானது. ஏன் பெண்கள் இப்படி இருக்கிறார்கள்? இது ஆண்கள் உருவாக்கினதா அல்லது பெண்களே உருவாக்கி தக்க வைத்ததா?
பெண் உடல் மீது ஆண் பிரயோகிக்கும் அதிகாரம், அவன் அதை தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த நினைப்பது பற்றி விவாதிக்கும் போது தன் உடலை பெண் அவ்வாறு கட்டமைப்பது ஏன் என்றும் நாம் கேட்க வேண்டும். பெண் ஏன் தன்னை ஒரு “ஆணுக்கான உடலாய்” தன்னை தொடர்ந்து காட்டிக் கொள்கிறார்? இங்கிருந்து தான் பிரச்சனை துவங்குகிறது.
இதை நாம் ஓரின சேர்க்கையாளர்களை (ஆண் பெண் இருவரிலும்) கவனித்தால் இன்னும் தெளிவாக புரிந்து கொள்ளலாம். ஓரினச் சேர்க்கையாளர்களில் ஒரு ஆண் எப்போதும் தன்னை “செக்ஸியாக”, “விருப்பத்துக்கு உரியவனாக” காட்டிக் கொண்டிருப்பான். மற்றவன் அவனை நாடுபவனாக, கட்டுப்படுத்த முனைபவனாக இருப்பான். இருவருக்குமான மோதல் தான் அவர்களின் உறவின் மையம்.
ஏன் ஓரினச் சேர்க்கையாளர்கள் இடையே கூட ஒருவர் “ஆணாகவும்” மற்றவர் “பெண்ணாகவும்” இருக்க நேர்கிறது? ஏன் ஒருவர் செக்ஸியாகவும் மற்றவர் அந்த செக்ஸை “அடைய விழைபவராகவும்” இருக்கிறார்?
இந்த இரண்டு தரப்பினருக்கு இடையிலும் உள்ள முரண் தான் ஈர்ப்பின் மையம். அதாவது சமத்துவமின்மை தான் காதலின் மையம். காதலிப்பவர்கள், காதலித்தவர்களுக்கு தெரியும் – ஒருவர் அடக்கப்படுபவராகவும் மற்றவர் அடக்க நினைப்பவராகவும் இருவரும் மாறி மாறி இருப்பார்கள். பாத்திரங்கள் மாறிக் கொண்டே இருக்கும். இது தான் காதலின் சுவாரஸ்யம். சமத்துவமான காதலோ தாம்பத்யமோ முழுக்க அசுவாரஸ்யமாக இருக்கும். பாலியல் சமத்துவம் பேசுவோர் இந்த பிரச்சனையை என்ன செய்ய போகிறார்கள்? தொடர்ந்து விவாதிப்போம்.
அன்புடன்
ஆர்.அபிலாஷ்


Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...