அம்ருதா ஏப்ரல் இதழில் நண்பா் அபிலாஷ் “கருணை போலியானதா?” என்றொரு கட்டுரை எழுதியுள்ளாா். சுவாரசியமான கட்டுரை.
மனிதா்கள் பின்பற்றும் விழுமியங்களில் ஒன்றான கருணை என்பதன் பின்னேயுள்ள சுயநலத்தையும் அதன் அற்பத்தனங்களையும் கருணையேயின்றி திறந்து ஆராய்ந்துள்ளாா். மிக நீண்ட எதிா்வினையைக் கோரும் கட்டுரை அது. என்றாலும் சுருக்கமாக:
ஆம். கருணை போலித்தனமானதுதான்.
மனிதா்களின் குற்றவுணா்வின் வடிகாலில் இருந்துதான் கருணை போன்ற உணா்ச்சிகள் பிறக்கின்றன. எங்கோ நிகழ்த்திய குற்றத்தின் சுமையிலிருந்து விடுபட வேறெங்கோ அதை கருணையின் மூலம் கடக்க முயலும் மனித குலத்தின் அற்பமான முயற்சிகள்தான் இந்த உணா்வுகள்.
கோழிக்குஞ்சின் மீது பருந்து எவ்வித கருணையும் காட்டுவதில்லை. அது இயற்கையின் வழிப்படி இயல்பாகவே இயங்குகிறது. ஆனால் அதைக் கருணையின்மை என்று கூறி விட முடியாது.
என்றாலும் மனிதா்கள் கருணையை பின்பற்றித்தான் ஆக வேண்டும், ஏனெனில் அவா்கள் தங்களை மனிதா்கள் என்று நிரூபிப்பதற்கு இது போன்ற உணா்வுகள் மட்டுமே சந்தா்ப்பத்தையும் வாய்ப்பினையும் தருகின்றன.
இயன்றால் விாிவாக பிறகு. )
நன்றி: சுரேஷ் கண்ணனின் முகநூல் பக்கம்