இரண்டு விசயங்கள். இக்கதையை இமையம்
இன்னும் சிறப்பாய் எழுதியிருப்பார் என ஒரு கணம் தோன்றியது. இன்னும் சில பரிமாணங்களை
கதைக்கு சேர்த்திருப்பார். ஒரு சில வசனங்களில் பக்க பாத்திரங்களை இன்னும் உயிரோட்டம்
கொள்ள வைத்திருப்பார். இன்னும் கூர்மையான கவுச்சி வாசம் வீசும் வசனங்களை எழுதியிருப்பார்.
நவீன சிறுகதையில் எழுதப்படாத விதி
ஒன்று உண்டு. பாலில் ஒரு துளி விஷம் கலந்தால் அந்த துளி விஷத்தை பற்றி எழுத வேண்டும்
என்பது அது. கண்மணி குணசேகரன் இயல்பாகவே அந்த பாலைப் பற்றியே எழுதுகிறார். அப்படி எழுதி
ஒருவர் மௌனியும் அசோகமித்திரனும் தொட்ட உயரங்களை அடைவது சிரமம்.