தினமணியில் வெளியாகும்
என் ஆங்கிலம் கற்பிக்கும் பத்தியின் இரண்டாவது கட்டுரை இது. இதில் குடிகாரர் என்றொரு
பாத்திரத்தை அறிமுகப்படுத்துகிறேன். அவரை ஆளாளுக்கு குடிக்காதீர்கள் என அறிவுரை சொல்லி
டார்ச்சர் செய்வதால் தன் பெயரையே குடிகாரர் என மாற்றிக் கொள்கிறார். Drunkard,
drunk ஆகிய சொற்களின் அடிப்படை வித்தியாசத்தை விளக்குகிறார். அதே போல முரண்பாடு கொண்ட
ஆங்கில சொற்கள் பற்றியும் இதில் பேசியிருக்கிறேன். உதாரணமாய் coconut என்பது கொட்டை
வகை (nut) இல்லை. இந்த தொடுப்பில் முழு கட்டுரையையும் படிக்கலாம்.
புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share
