தினமணியில் செவ்வாய்
தோறும் வெளியாகும் இளைஞர் மணி இணைப்பிதழில் ஒரு தொடர் எழுத துவங்கியிருக்கிறேன். கதை
வடிவில் சில ஆங்கில சொற்களையும் தொடர்களையும் அறிமுகப்படுத்துவது நோக்கம். ஒரு பக்கம்
காது கேட்காத ஒரு ஓய்வு பெற்ற பேராசிரியர், சரளமாய் ஆங்கிலம் பேசும் அவரது நாய் ஜூலி
மற்றும் அவரிடம் ஆங்கிலம் கற்க விரும்பும் மாணவர் கணேஷ், அவர்களுக்கு பரிச்சயமானவர்கள்
என பாத்திரங்கள் வருவார்கள். கொஞ்சம் நகைச்சுவை, பகடி, அன்றாட நடப்பு பற்றின சேதிகள்
கொண்டு எழுதலாம் என இருக்கிறேன். இந்த இணைப்பில் தொடரின் முதல் பகுதியை பார்க்கலாம்:
புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share
