Skip to main content

கால்கள் நாவலுக்கு ஒரு கடிதம்

(இக்கடிதம் ஒரு நல்ல விமர்சனமாகவும் இருப்பதால் எழுதியவரின் அனுமதி பெற்று வெளியிடுகிறேன்)

அன்புள்ள அபிலாஷ்
வாழ்த்துக்கள்.உங்களுக்கு இளம் எழுத்தாளர் பரிசு கிடைத்ததற்கு மகிழ்ச்சியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.உங்களுடைய இன்றிரவு நிலவின் கீழ் நூலையும் படித்தேன் ,நல்ல முய்ற்சிகள்.இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கி மேன்மேலும் படைப்புத் துறையிலும் எழுத்திலும் வெற்றிகளை ஈட்டுக.உங்கள் கால்கள் நாவலை எங்கள் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.

கால்களில் கதை சொல்லும் முறையில் தொய்வில்லாமல் இவ்வளவு பக்கம் எழுதியது உங்கள் திறமையைக் காட்டுகிறது.மொழியின் ஆழமும் அதன் உவமை முதலிய நிறைந்த செழுமையான நடையும் கவரத்தக்கதாக உள்ளன.அதற்கும் மேலே அப்படைப்பில் வெளிப்படும் ஒரு அறிவு ததும்பும் வாழ்க்கைச் சூழல் அதற்கு  ஒரு உயர்ந்த தரத்தைத் தருகிறது.பாசாங்கில்லாத மெய்மை சார்ந்த பாத்திரப்படைப்பு உங்கள் புனைவுலகத்திற்கு வலுச் சேர்த்துள்ள ரசவாதம் வியப்பாக உள்ளதுஇபல விஷயங்களைப் பற்றிய அநாயாசமான பார்வைகளில் வெளிப்படும் முதிர்ச்சியான உதிர்ப்புகள் (அண்ணா குறள் பற்றியவை)இளைஞரான உங்களிடம் ஏற்பட்டுள்ள ஆரோக்கியமான வளர்ச்சியைக் காட்டுகிறது.இது பாராட்டிப் போற்றத்தக்கது.தமிழுக்குப் பெருமையும் வளமையும் சேர்ப்பது.அதற்காகத் தான் இந்தப் பரிசு.தொடர்க உங்கள் இலக்கியப்பணி.தமிழ்ப் பணி.
வாழ்க வளர்க வளமுடன்
அன்புடன்
கி.நாச்சிமுத்து

 -- 
Prof.Krishnaswamy Nachimuthu
Professor &Coordinator ,Department of Tamil,
Central University of Tamilnadu
Neelakkudi Campus.Kangalancherry,
Thiruvarur-610 101(Tamil Nadu)

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...