நிருபர்: இந்த தோல்வியை பத்தி என்ன நினைக்கிறீங்க?
தோனி: நான் கேப்டன் ஆனதில இருந்து எத்தனையோ தோல்விகள் பார்த்திட்டேன்.
அதனால புதுசா ஒண்ணும் நெனக்கல
நிருபர்: ஆனாலும் ரொம்ப கேவலமா தோத்திட்டீங்க. உங்களுக்கு அசிங்கமா
இல்லியா?
தோனி: நான் உலகப் பணக்காரர்களில் ஒருத்தன். எங்க அணியில்
ஒவ்வொருத்தரும் கோடிஸ்வரர்கள். அவங்களும் சீக்கிரம் உலகப் பணக்காரர்கள்
ஆகிடுவாங்க. நாங்க ஏன் அசிங்கப்படணும்? நீங்க இந்த கேள்வியை டாட்டா பிர்லாவை நோக்கி
கேட்பீங்களா?
நிருபர்: இந்த மேட்சில இஷாந்த் ஆடாதது தான் தோல்விக்கு காரணமா?
தோனி: ஆக்சுவலி அவர் ஆடினா எங்களுக்கு அனுகூலம். அவரை எல்லாரும்
திட்டுவாங்க. இப்போ அவர் இல்லாததினால நாங்க எல்லாரும் திட்டு வாங்குறோம்
நிருபர்: நீங்க வெறும் மூணு பவுலர்ஸோட போனீங்க. ஆனா பவுலிங் வீக்
ஏரியான்னா அதிகமான பவுலர்ஸ் தானே அணியில் எடுக்கணும்?
தோனி: அப்பிடீன்னா 8 பவுலர்ஸோட ஆட்டடுமா?
நிருபர்: அப்போ பேட்டிங்கை பலப்படுத்த நீங்க 11 பேட்ஸ்மெனோட ஆடுவீங்களா?
தோனி: நான் தான் குண்டக்காமண்டக்கான்னு பதில் சொல்லுவேன். நீங்க
அப்பிடி கேள்வி கேட்கக் கூடாது. BCCI விதிமுறைகளில் அப்பிடி இருக்கு.
நிருபர்: ரோஹித் ஷர்மா பத்தி சொல்லுங்க. அவர் ஏன் இப்பிடி கேனத்தனமா
அவுட் ஆகுறாரு? நீங்க ஏன் அவரை விடாப்பிடியா சப்போர்ட் பண்றீங்க?
தோனி: ரோஹித் ரொம்ப நல்லா ஆடுனாரு. ஆனா அவுட் ஆகிட்டாரு.
நிருபர்: அதெப்டீங்க முடியும்? மோசமா ஆடுனா தானே அவுட் ஆவாங்க?
தோனி: ஆபரேஷன் சக்ஸஸ் பேஷண்ட் டெட்னு கேள்விப்பட்டதில்லையா அது மாதிரி
நிருபர்: இந்த மேட்சில இந்தியாவுக்கு சாதகமான அம்சம்னு, அதாவது நாம
இன்னின்ன விசயங்களில நல்லா பண்ணி இருக்குமோன்னு எதை சொல்லுவீங்க?
தோனி: குக், பேலன்ஸ் ரெண்டு பேரும் பிரமாதமா பேட்டிங்க பண்ணுனாங்க. ஆண்டர்ஸன்
வழக்கம் போல கலக்கிட்டாரு, அந்த மோயின் அலி குட்டிப்பையன் ரொம்ப அட்டகாசமா பவுலிங்
போட்டு ஆறு விக்கெட் எடுத்தான். மொத்தத்தில நாம் ரொம்ப திருப்தியா இருக்கேன்.
நீருபர்: இவங்க எல்லாம் இங்கிலாந்து வீரர்கள்!
தோனி: கிரிக்கெட்டில எல்லாருமே ஒண்ணு தான். அவங்க ஒரு மோசமான பால்
போட்டா தான் தான் நான் நாலு ரன் அடிக்க முடியும். அது மாதிரி நான் ஒரு கேட்ச்
பிடிச்சா தான் அவுங்க அவுட்டாக முடியும். அதனால எல்லாருடைய சாதனைகளிலும் நமக்கு
பங்கு இருக்கு. இப்பிடி பிரிச்சு பாக்காதீங்க. அது நல்லா இல்ல சொல்லீட்டேன்.
நிருபர்: சரி கடைசியா சொல்லுங்க. நீங்க ஏன் தோத்தீங்க?
தோனி: நாங்க எங்க தோத்தோம்? நாங்களும் நல்லா ஆடுனோம். இங்கிலாந்தும்
நல்லா ஆடுனாங்க. இங்கிலாந்து ஜெயிச்சாலும் நாங்க ஜெயிச்சாலும் ஒண்ணு தான். என்னோட CSK அணிகிட்ட நான் அடிக்கடி ஒரு பழமொழி தமிழ்ல சொல்லுவேன். யாதும் ஊரே
யாவரும் கேளிர். அப்புறம் இன்னொண்ணு கூட சொல்லுவேன். அது ஸ்ரீனி மாமாக்கு ரொம்ப
பிடிக்கும்.
நிருபர்: என்னது?
தோனி: சென்னை சூப்பர் கிங்ஸுக்கு விசில் போடு!
