Skip to main content

Posts

Showing posts from September, 2013

எழுத்தாளனும் வாசகனும்: தெய்வமும் ஊமையும்

நண்பர் செந்தில்குமாரை நேற்று முதன்முறை சந்தித்தேன். நான் எழுதிய கட்டுரை ஒன்று குறித்த தன் கேள்விகளை ஒரு நோட்டுபுத்தகத்தில் குறித்து கையுடன் கொண்டு வந்திருந்தார். நானும் பொதுவாக எழுத்தாளர்களை ஒரு தயாரிப்புடன் தான் சந்திக்க செல்வேன். வரிசையாக கேள்விகள் கேட்பேன்.

That was a good interview!

சமீபத்தில் “முதல்வன்” திரும்ப பார்த்தேன். இறுதிக் காட்சியில் குண்டடிபட்டு கிடக்கும் முன்னாள் முதல்வர் ரகுவரன் சிரித்தபடி நாயகனை நோக்கி சொல்கிறார்: “அது ஒரு நல்ல பேட்டி”. இந்த வசனம் மொத்த படத்தை திருப்பி போட்டு ரகுவரனின் பார்வையில் இருந்து பார்க்க வைக்கிறது. 

கௌரவக்கொலைகளின் அரசியல்: தெற்கும் வடக்கும்

கௌரவக் கொலைகளுக்கு என்றொரு பாணி உள்ளது. முதலில் ஓடிப் போன காதலர்களை சாதுர்யமாக பேசி அழைத்து வருவார்கள். பிறகு சித்திரவதை செய்து கொடூரமாக கொல்லுவார்கள். மொத்த ஊரின் பங்களிப்பும் ஆசீர்வாதமும் இதற்கு இருக்கும். அடுத்து ஒரு கொடூரமான அமைதி அங்கு கவியும். அரசியல்வாதிகளோ சம்மந்தப்பட்ட மக்களோ தெரியாமல் காரை ஒரு நாயின் மீதி ஏற்றி விட்டது போல் கண்டும் காணாதது போல் கடந்து போவார்கள். எந்த பிரதான அரசியல் கட்சியும் கண்டனங்கள் தெரிவிக்காது. 

விபச்சாரம்: உடல் எனும் பெரும் “தடை”

தமிழோடு ஒப்பிடுகையில் மலையாள சினிமாவில் விபச்சாரம் பற்றி நேர்மறையாக அல்லது மனிதாபிமானத்தோடு விவாதிக்கும் படங்கள் அதிகமாக வந்துள்ளன. தமிழ் சினிமாவில் பெரும்பாலும் விபச்சாரி தீமையில் விழுந்து நாயகனால் காப்பாற்றத்தக்க ஒரு அபலை மட்டும் தான். மலையாளத்தில் சில முக்கிய படங்கள் விபச்சாரத்தின் பின்னுள்ள விழுமியங்களை தீவிரமாக விசாரித்தன. 

“தீஷியஸின் கப்பல்”: கலகக்காரர் கோக் குடிக்கலாமா?

“Ship of Theseus” பார்த்து விட்டு அனுராக் காஷ்யப் தன்னை ஒரு இயக்குநராக கருதவே கூச்சமாக இருக்கிறது என்றார். இந்திய சினிமாவில் இப்படத்திற்கு ஒரு முன்மாதிரி இருக்கிறதா என வியப்பாக இருக்கிறது. நமது சிறந்த இயக்குநர்களின் ஆகச்சிறந்த கலைப் படங்கள் கூட அடிப்படையில் உறவுகளை, ஒரு சமூகப் பிரச்சனையை, அல்லது மனித உளவியலை புது கண்ணோட்டத்தில் காட்டியிருக்கும். Ship of Theseus இன்னும் ஒரு படி மேலே போய் மனித வாழ்வின் அடிப்படையான பிரச்சனைகளை அலசுகிறது.

தாமினியும் திவ்யாவும்: இந்திய காதலின் சிக்கல்கள்

-            சேரனின் மகள் தாமினியின் காதல் ஒரு பொது சர்ச்சையாக மாறினதும் எழுந்த முதல் கேள்வி காதலை கொண்டாடி படம் எடுக்கிற சேரன் எப்படி தன் மகள் காதலை மட்டும் பிரிக்க நினைக்கலாம் என்பது. மேலோட்டமாக தோன்றினாலும் இது ஒரு முக்கிய கேள்வியே. சேரனின் படங்களுக்கு வருவோம். அவரது “ஆட்டோகிராப்”, ”பாரதி கண்ணம்மா” மற்றும் “பொக்கிஷம்” போன்ற படங்களில் காதலியின் அப்பா சேரனை போன்றே தான் காதலுக்கு விரோதமாக நடந்து கொள்கிறார். ஆக சேரன் சினிமாவில் ஹீரோ நிஜவாழ்க்கையில் வில்லனா? அல்ல. அவர் என்றுமே லட்சிய காதலின் மகத்துவங்கள் பேசினது இல்லை.

புத்தகங்களுக்கும் விற்பனைக்கும் இடையே

ஒருமுறை ஓப்பன் மேகஸினில் ஒரு வெளிநாட்டு பதிப்பகத்தின் எடிட்டரின் பேட்டியை போட்டிருந்தார்கள். புத்தகத்தை எப்படி சந்தைப்படுத்துகிறார் என்பது பற்றி அவர் கூறின விசயங்களை படிக்க கொஞ்சம் பொறாமையாக இருந்தது.

கோயில் தங்கத்தை பதுக்குவதன் அரசியல்

ரிஸர்வ் வங்கி நாட்டிலுள்ள கோயில்களின் தங்கத்தின் கணக்கை அறிய முயன்று வருகிறதை ஒட்டி கோயில் தங்கத்தை விற்று பணவீக்கத்தை குறைக்கலாமா என்கிற விவாதம் எழுந்துள்ளது. கோயில் பணம் குறித்த ஒரு தெளிவை எட்டுவதற்கு இச்சந்தர்ப்பம் உதவும்.

நமக்கு வேறு போக்கிடம் ஏது?

உயிர்மையின் 11ஆம் ஆண்டை நிறைவு செய்கிற இம்மாத இதழை பார்க்கையில் கடந்த சில ஆண்டுகளில் பங்களித்த எழுத்தாளர்கள் கணிசமாய் மாறி உள்ளது தான் பளிச்சென்று கண்ணில் படுகிறது. மனுஷ்யபுத்திரன் அதன் அத்தனை சாதக பாதகங்களையும் அறிந்து தான் நிறைய புதியவர்களை அனுமதிக்கிறார். சட்டென்று ஒரு புதிய வெளிச்சம் பாய்ந்தது போல் இருக்கிறது. 

உன் மீதான அன்பு குறித்து சில சொற்கள்

நான் பலசமயம் திருமணமாகி எத்தனை வருடங்களாகின்றன என்பதை மறந்து விடுவேன். பெரும்பாலும் ஐந்து ஆறு என மாற்றி மாற்றி சொல்வேன். ஒரு விதத்தில் எனக்கு திருமணமான உணர்வே இத்தனை நாளும் ஏற்பட்டதில்லை.